அவதரித்தல் என்ற சொல்லினை அறிந்துகொள்வோம். இதை சொல்லியல் மூலமே திறத்தோடு அறியக்கூடும்.
அவம் என்பது அழிதல். இது தோன்றிய விதம்:
அவி - இச்சொல்லின் மூலவடிவம் அவ் என்பதாகும். அவு எனலும் ஆகும். என்றால் சேய்மையிலும் முன்னிலையிலும் என்று சுட்டடி வழியாக உணராலாம்.
சேய்மையிற் சென்றது இல்லாமல் ஆதல்.. நீரானது ஆவி ஆனபின் அது (உங்கள்) முன்னே இல்லாமல் போய்விடுகிறது.
ஆவி என்ற சொல்:
அவி > ஆவி, இது சுடு> சூடு என்பதிற்போல, முதல் நீண்டு தொழிற்பெயர் ஆகிறது. இது வடசொல் குடசொல் ஒன்றுமில்லை. வடசொல் என்பவன் தமிழை ஆய்ந்து படிக்காதவன்.
நீரில் உள்ள உள்வளி (gas) அவிழ்பட்டது அது உருமாறி விட்டது. நீர் என்பது H20, இரண்டு நீரகவளிப் பகவும் ஒரு உயிர்வளிப் பகவும் உள்ள அது அவிழ்பட்டுவிட்டது என்பது அறிவியல்.
அவி என்பதில் அகரம், இகரம் இரண்டையும் வகர உடம்படு மெய் கட்டிவைத்துள்ளது.
தரு - தரி. இது தரு+ இ. தரவுபட்டு இங்கே வந்துவிட்டது என்று பொருள். ஆகவே அழிந்தது இங்கு மீண்டும் காட்சி தந்துவிட்டது என்று பொருள்.
இப்போது அவதரித்தல்:
ஆவியாய் ஒழிந்தது மீண்டு வந்துவிட்டது என்பது பொருள்.
அறிவியற்படி எதுவும் அழிவது இல்லை எனலாம். எல்லாம் மீள்தோற்றம் கொள்கின்றன என்பதே உண்மை. வேற்றுரு. ஆவி எங்கே?
அவதரித்தல் என்ற சொல் இந்தக் கதையைத்தான் நமக்குத் தெரிவிக்கிறது.
அவதரித்தல் என்பதைத் தோற்றரவு என்று மீளமைப்புச் செய்தனர்.
தோன்று + அரு+ [வு ( விகுதி)]
தோன்று என்பதற்குத் தொலைவுமூலமானது தொல் என்ற பழஞ்சொல்லே,
தொல்> தொன்று > தோன்று.
தொன்று தொட்டு உள்ளதே தோன்றுகிறது.
தமிழும் அறிவியலுடன் ஒட்டியே செல்கிறது.
தொல் என்பதற்கும் தோன்று என்பதற்கு உள்ள உறவு புரிகிறதா. இதுதான் தமிழ்.
அறிக மகிழ்க.
மெய்ப்பு பின்னர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக