பண்ணார்ந்த கண்மணியே----ஒளி
பாய்ந்தாளும் விண்மணியே----உனை
எந்நாளும் கொண்டாடுவேன் ----
மறவேனே யான்எந்நாளுமே.
கண்மூடிச் சாய்ந்திருந்தேன் ---- யாதும்
காணாமல் ஓய்ந்திருந்தேன்---- மிடை
விண்மேகம் நீங்கினவே ----
மறவேனே யானெந்நாளுமே
இன்னல்கள் இல்லாமலே ---- துன்பம்
உண்டென்றும் சொல்லாமலே ---- தடை
மின்னல்தீர் இந்நாளையே----
மறவேனே யான்எந்நாளுமே.
காலைக்குள் வாராதாரும்----காலை
போகுமுன் ஓடிவந்தார் ---- அவர்
வேளைக்குள் உண்டவிந்தை ---
மறவேனே யான் எந்நாளுமே.
இருப்பேனே வீட்டிலென்று --- விட்டி
ருந்தாரும் கூட்டிவந்தாய்;
மறந்தாரும் பற்றிக்கொண்டார்
மறவேனே யானெந்நாளுமே.
எல்லாருமே வணங்கி -- வேண்டும்
எல்லாமும் கேட்டுநின்றார்;
எண்ணார் இறைஞ்சிநின்றார்,
மறவேனே யானெந்நாளுமே.
என்னை அறிந்துள்ளவர் ---- இருவர்
மூவர்க்குச் சொன்னசொல்லை
பின்னைப் பலர்க்கும்சொல்வாய்
மறவேனே யானெந்நாளுமே.
செயலற்று நின்றேனையே ---- இன்று
செயற்படுத் திடுந்தேவி,
வயலின்றி விளைச்சல்செய்தாய்
மறவேனே யானெந்நாளுமே.
கவலையில் காய்ந்துவிட்டால் ---- வந்தெனைக்
காப்பாற்றிக் கரைசேர்க்கிறாய்,
திவலையில் வெள்ளம்வரும்
மறவேனே யானெந்நாளுமே.
---------------------------------------------------------------
மிடை - கூடியிருந்த ; செறிந்திருந்த.
சிரகம் திவலை.
கடக்குமுன் கடுகிவந்தார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக