செகுத்தல் என்பது அழித்தல் என்று பொருள்படும்.
சேகம் என்பது முதல்நிலை ( சொல்லின் முதலெழுத்து) நீண்டு, அம் என்னும் விகுதி பெற்று ஆன சொல்.
செகு + அம் என்பது இந்த முறையின்படி சேகம் என்று வரும். அதன் இன்றைப் பொருளை வரையறவு செய்தலில் மீள்பார்வை கொள்ளுதல் கூடும். எவ்வுயிரையும் பலியிடுவதைத் தவிர்த்த நிலையில், அழுக்காறு, அவா, வெகுளி (கோபம்), இன்னாச்சொல் நான்கும் இல்லாமலாக்குதல் அல்லது அழித்தல் என்றும் எடுத்துரைக்கலாம். பண்டைக்காலம் தொட்டு, சைவநெறியிலும் வைணவ நெறியிலும் பலிகொடுத்தல் விலக்கப்பட்டு வந்துள்ளதைக் காணலாம். ஆகவே அழித்தல் என்பது தீயகுணங்களை அழித்தல் என்றே கொள்ளுதலுக்கும் ஆதாரங்கள் உள்ளன.
இறைவனின் திருவுருவங்களை கோயிலில் நிறுவு முன்பாக, அவற்றுடன் துணைவரும் நன்மைகளை நிலைநிறுத்தவும் தீமைகளை விலக்கவுமான வணக்க நெறியை உயர்த்தவும் சொல்லப்படும் மந்திரங்களையும் நீராட்டுதலையும் குறிப்பதாகக் கொள்வது ஏற்றபொருளுடன் கூடியதே ஆகும்..
எல்லா வழிபாடும் தீமை விலக்குதலுக்காகச் செய்யப்படுவதே. பலியிடுதல் உள்ள கோவில்களிலும் இதுவே மூலநோக்கமாகும்.
எதை அழிப்பது என்பது சொல்லில் மறைவாக உள்ளது. தீமையை அழிப்பது என்பது வெளிப்படும் பொருண்மை ஆகும்.
இதனை அபி+ இடு+ ஏகம் என்று உரைத்தும் அபிடேகம்> அபிஷேகம் என்றாகும். இது பலவாறு பொருளுரைக்க வழியுடைய ஒரு சொல். அதன் பின் ஒன்றுபடுத்திச் செல்லும் வழிபாடு என்று பொருள்படும். அ பி - அதன் பின்.இடுதல் - பூசை முதலியன இடுதல். ஏகு அம் > செல்லும் வழிபாடு.
பல வாறாக உரைபெறும் சொல் இது. பல்பிறப்பி.
அறிக மகிழ்க.
மெய்ப்பு பின்னர்.