இப்போது " ஆண்" என்னும் சொல்லை அறிந்துகொள்வோம். அதாவது நாம் இச்சொல் எப்படித் தமிழில் அமைந்தது என்று தெரிந்துகொள்ள முனைகிறோம். மற்ற விளக்கங்களை எழுதப் பலர் உள்ளனர். இன்னொருவர் சரியாக அமைப்பினை விளக்கியிருந்தால் அதையே மீண்டும் எழுதவேண்டியதில்லை. அதைப் படித்தே அறிந்துகொள்ளட்டும். தமிழின் இனிமை நீங்கள் அறியவேண்டும் என்பதற்காகவே எழுத முனைவதால் மறு அயற்பதிவுகள் இங்கு இடம்பெற மாட்டா. மாறுபடின் எழுதப்படும்.
ஆண் :இதன் அடிச்சொல் அண் என்பது.
அண் > அணுகு என்ற ஒரு வினைச்சொல் போதுமானது. இதே பொருளினைத் தரும் வேறு வடிவங்களைச் சொல்ல வேண்டியதில்லை. சுருக்கம் கருதித் தவிர்ப்போம்
அண் என்பது முதல் நீண்டு, ஆண் என்றாகும். அதாவது பெண்ணை அணுகுபவன். தமிழனின் கலையாக்கச் சாரங்களும் இதையே ஏற்புடையது என்று கொள்ளும் என்று அறிக.
சுடு என்பது முதல் நீண்டு, சூடு ஆகி தொழிற்பெயரானது போல அதே பாணியில் அமைந்ததே இச்சொல். அண் : அணுகு ( வினையாக்கச் சொல் ), அண் - ஆண். ( அணுகும் வகையினன் அல்லது வகையினது என்பது).
ஒளி குறிக்கும் ஒள் - ஒண் என்ற அடிகள். ஓண் என்று நீண்டு, பின் அம் விகுதி பெற்று ஓணம் என்ற நட்சத்திர ( உடு)ப் பெயரானது. [ நக்கத்திரம் ]. ஒரு பகுதி ஆண் என்ற திரிபினை ஒத்தது காண்க. இது பின் திருவென் அடைமொழி ஏற்றது. இதிற் பிறந்தோர் நற்குணமுடையோராய் இருப்பார்கள்.
ஆங்கிலச் சொல் male என்பது maris என்பதிலிருந்து வந்ததென்பர். ( Genitive case). இது "ஆண்மை " உள்ளது என்று பொருள் படுவதாகச் சொல்லப்படும். என்றாலும் இது மருவுதல் என்ற தமிழ்ச்சொல்லுடன் தொடர்புடையதாகக் காட்டப்பெறுதலும் கூடும். மரிஸ் > மருவு. வு என்பது வினையாக்கம். பிள்ளைப் பேற்றுக்குரிய மறுபாதி உடலுடையது அல்லது "உடலன்." பெண்மையை மருவும் பாதி.
Man என்பதும் மாந்தன் என்பதிலுள்ள மான் என்பதனுடன் ஒப்புடைமை தெரிவிக்கும் சொல். மன்> மன்+து+ அன் > முதல் நீண்டு, மாந்தன், மன்+தன் > மனிதன், (மன்+ இ+ து + அன்). இ, து என்பன இடைநிலைகள். அடிச்சொல் மன் என்பதே. மன்னுதல் - நிலைபெறுதல். மான் (மேன்) என்பது இருபொருட் சொல் என்பது நீங்கள் அறிந்தது ஆகும்.
மனிதன் மண்ணிலிருந்து வந்தவன் என்ற கருத்துக்கும் மனிதன் என்பது பொருத்தமான சொல்லே ஆகும். மண் > மன். மண்ணே நிலைபெற்றது. 0னகரம் ணகரமாகும். எ-டு: அணுகுதல் என்பதிலிருந்து, அண்> அன் > அன்பு. இங்கு பு என்பது விகுதி. அணுக்கமே அன்பின் வெளிப்பாடு.
மேன் (மான்) என்பது பெண்ணையும் குறிக்கும். சர்ச்சில் கூறியதுபோல், "Man embraces ( includes) woman". பல சட்டவரைவுகளில் person என்ற சொல்லைக் காணலாம். இது உண்மையில் முகமறைப்பு (mask) என்று பொருள்தந்த சொல்லினின்று பொருள்திரிந்து வந்த சொல் என்பர். (also see dramatis personae).
அறிக மகிழ்க.
மெய்ப்பு பின்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக