காசநோய் காரணமாக இவ்வுலக வாழ்வைக் கடந்து சென்றுவிட்டவர்கள் பலர். இவர்களிற் பெரும்பான்மையோர் பல்வேறு துறைகளில் நற்சேவை புரிந்துகொண்டிருந்தவர்கள். பலர் இனிய கானங்கள் பாடி நம்மை மெய்ம்மறக்கச் செய்யும் திறனுடையார். இத்துணை இனிய குரலுக்குரியோரையும் இளமையிலே கொன்று விட்டதே இந்நோய் என்று மனம் கவல்கின்றோம். இன்னும் பல திறலோர் மடிந்துள்ளனர். உலக உடல்நலத் துறை நிறுவனம் இதிற் கவனம் செலுத்திவருகின்றமை அறிந்து நாம் ஆறுதலடைகிறோம். செல்வமுடையாரும் சிறந்த மருத்துவ அறிஞர்களும் இதற்கு ஏதேனும் செய்வார்கள் என்று நம்புவோம்.
திரிபுகள் இல்லாத மொழிகள் இல்லை என்ற முடிவுக்கு வரவேண்டியுள்ளது. எடுத்துக்காட்டாக, ஜீசஸ் கிரைஸ்ட் என்ற ஆங்கிலம், ஒவ்வொரு மொழியிலும் ஒவ்வொரு வகையில் திரித்து வழங்கப்படுகிறது. இது ஜீசஸ் கிரைஸ்ட் என்று பலுக்க இயலாமை காரணமாக இவ்வாறு மாறிவிடுகிறது என்று சொல்லலாம் என்றாலும் மனிதர் எல்லோரும் இவ்வாறு நாவொலி எழுப்பும் திறனற்றவர்கள் என்பது அவ்வளவு பொருத்தமுடைய காரணியாகத் தோன்றவில்லை. ஒவ்வொரு மொழியிலும் ஓர் ஒலிமரபு உள்ளது. தாங்கு என்பது தமிழுக்குப் பொருத்தமென்றால் அதேசொல்லுக்கு ஈடான மரபுவழியில் : "தாங்" என்று வெட்டுற நிறுத்துவதே சீன மொழிக்கு பொருத்தமான ஒலிப்பு ஆகும். இஃது ஒலிப்புக்கு மட்டுமே, பொருள் எதுவாகவுமிருக்கலாம். ஏசு கிறிஸ்து என்பது, ஹேஸு க்றிஸ்டோ என்றால்தான் தகலோக் மொழிக்குப் பொருத்தமான ஒலிப்பு முறையாகிறது. சீனமொழியில் இது ஜேஸு ஜிடு : அதாவது ஏசுவானவர் நம் பாக்கியத்தால் (நற்பேற்றினால்) நம் முன் தோன்ற நாம் அவரைத் தமிழில் " ஏசு அவர்களே" என்று பணிய, நம் பக்கத்தில் நிற்கும் சீனர் "யே சூ ஜி டூ " என்றுதான் மொழிந்தாடுவார். முகம்மது நபி அவர்களுக்கு முவம்மர் என்றும் மாமூட் என்றும் அரபு அல்லாத பிற திரிபுகள் உள்ளன. டேவிட் என்பது டாவுட் ஆக, ஏப்ரஹாம் என்பது இப்ராகிம் ஆகிவிடுகிறது. டேவிட் மார்ஷல் என்ற பெயர், சீனமொழியில் தாஹ்வே மார்சியாவ் என்றாகிவிடுகிறது. சோலமன் என்பது சுலைமான் ஆகிவிடும். சோலமன் என்பது தமிழ்நாட்டில் சாலமன் என்றாகிறது. இத்தகைய மாறாட்ட ஒலிப்புகளால் புடு ஜெயில் என்பது புது ஜெயிலா பழைய ஜெயிலா (சிறை) என்று தெரியவில்லை. மாசிலாமணி என்பதில் மா சி என்பது சீனமொழியில் குதிரை செத்துவிட்டது என்று பொருள்தருவதால், சரியில்லை எனவே, மணி என்றே அழைக்கப்பட்டார்.
காசம் என்ற சொல்லை, காய நோய் என்பதன் திரிபு என்பது ஏற்கத்தக்கதாகலாம் . காய என்பது காச என்றாகும். இந்த நோயில் காய்ச்சல் வருமாம். ஆனாலும் இருமல் மூலம் இரத்தக் கசிவு இருப்பதால், கசி+ அம் > காசம் என்பதன் திரிபு என்பது பொருந்துவதாகும். இது படி+ அம் = பாடம் என்பதுபோலவே. நடி+ அகம் என்பது நாடகம் என்பதாவது போலவுமாம். முதனிலை திரிந்து தொழிற்பெயர் ஆன சொல். முதனிலை திரிவதாவது படு> பாடு, சுடு> சூடு என்பது போல. ஆடுறு தேறலாவது அட்ட தேறல். ஆடுறல், சமையலுற்றது என்பதாகும்.. மசிக்கப்பட்ட அரைப்பு, மசாலை. ( மசாலா). மசிக்கப்படுவதால் ஆனது. மசி+ஆல். இவற்றுள் வினை இறுதி இகரம் கெட்டது.
மதி அம் > மாதம் > மாசம் ( த: ச திரிபு). இங்கும் இகரம் கெட்டது.
அறிக மகிழ்க
மெய்ப்பு பின்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக