இன்று சிப்பாய் என்ற ஆங்கிலச் சொல்லை ஆய்வு செய்க.
பாரசீக வளைகுடா நாடுகளிலிருந்தோர், அங்கிருந்து வெளிப்போந்து பல இடங்களுக்கும் சென்றுள்ளனர். அங்கு மிங்கும் நடைபெற்ற போர்களில் சேனைச் சேவகர்களாய் வேலைசெய்து சம்பாதிப்பதே இவர்களின் நோக்கமாகும். வெற்றி அடைந்தாலும் அடையாவிட்டாலும் விலையுள்ள பொருட்களைக் கவர்ந்து செல்வது பண்டை நாட்களில் படைஞர்களிடம் பொதுவான காணப்பட்ட நடவடிக்கையாகும். இதுவே பெரிய ஊதியமெனலாம். அழகிய பெண்களைக் கவர்ந்து சென்றுவிடுவதும் பரிசுகளில் முதன்மையானதாக அவர்கள் கருதியதே ஆகும்.
வெள்ளைக்காரர்கள் வந்துசேர்ந்த பொழுதும் அவர்கள் உள்நாட்டி லுள்ளவர்களைத் தம் படைகளிற் சேர்த்துத்தான் போதுமான ஆள்பலத்தை அடையவேண்டியிருந்தது. இந்திய நாட்டுப் படைமறவர்கள் உருவிற் சிறியவர்கள். வெள்ளைக்காரர்களின் முன் இவர்கள் சிறு பையன்களாகவே காட்சியளித்தனர்.
இந்தப் பையன்களை எவ்வாறு குறிக்கலாம் என்னும்போது " சிறு பையன்" என்றே அழைத்தனர். சி - பை என்பதே இவர்களைக் குறிக்கும் சொல்லாகக் கையாளப்பட்டது. இதுவே எல்லாத் தொடர்புடைய மொழிகளுக்கும் பரவிற்று.
சி - சிறு; பை - பையன். இது "சீ போய்", அல்லது "சீ பாய்" ஆனது. தமிழில் இது குறுகிச் சிப்பாய் ஆயிற்று. இது ஆங்கில மொழிக்கும் பொருந்தியதாய் அமைந்தது. சி - சிமால், பாய் . boy,
பழம் நழுவிப் பாலில் விழுந்ததுபோன்ற பொருத்தம் இதுவாகும்.
பாரசீகம் வரை பரவிவிட்ட இச்சொல்லின் திரிபுகள் வெறுந்திரிபுகளன்றி மூலங்கள் என்று கருதக் காரணமில்லை. இந்தியச் சிப்பாய்களின் புகழ் எங்கும் பரவியிருந்தமையே இப்பரவுதலுக்குக் காரணமாகும்.
அறிக மகிழ
மெய்ப்பு பின்னர்.
மீள்பார்வை செய்யப்பட்டது: 22092023
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக