இனி அபேட்சை என்பது வந்துற்ற விதம் காண்போம்.
ஏதேனும் ஓர் அவா மனத்தினுள் ஏற்பட்டுவிடுமாயின், அத்தகு அவாவினுட் பட்ட மனிதன் அதனால் அலைப்பட்டு விடுகிறான்.
அவா ஏற்சித்தல் - அவேற்சி > அபேட்சி+ ஐ > அபேட்சை ஆகிவிடுகிறது.
சித்தல் என்பது சுற்றல் ( சுத்தல் ) என்பதன் திரிபு.
ஏல் என்பது ஏற்றல் வினை(ச்சொல்).
வகரம் பகரமாகும் என்பதால், அவா என்பது ஏல் என்பதன் முதனிலை ஏகாரத்தினோடும் கூடி, அபே என்று நின்றது காண்க.
இவ்வாறு நோக்க, அவாவினோடும் செல்லுதல் என்ற கருத்து பெறப்படுகிறது.
இன்னொரு நோக்கில், அவா இச்சை என்ற இரண்டும் கூடித் திரிந்து, அபேட்சை என்று திரிந்து நடத்தலும் இயல்வதே.
அறிக மகிழ்க
மெய்ப்பு பின்னர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக