continued  from previous post

இனி, வேறொரு விதமாகவும் சொல்வதற்கு இடமிருக்கிறது? அது என்ன? மேல் என்பது மேற்றிசை அல்லது மேற்குத் திசையையும் குறிக்கலாம். வானவர் என்று தமிழர்களால் கருதப்பட்ட சிற(வ)ந்த நிறமுடைய மக்களின் (அல்லது தேவர்களின்) நகரமும் பக்கம்தான் என்பதுதான் அது. எனினும் அது நகரம் மட்டுமே! பாடலாசிரியர் அதை நாடு என்று சொல்லவில்லை. நாடில்லாத நகரம். ம்! சிங்கப்பூர் மாதிரி. ஆசிரியர் சொல்லாததை யெல்லாம் இல்லாதது என்று எடுத்துக்கொள்வதிலும் இடர் ஏற்படலாம். சரி, நாகருடையது நாடு; நகரமன்று. சற்று விரிந்து பரந்தது, -- நகரத்துடன் ஒப்பிடும்போது.

அதேபோல், நாகர் கீழை நாட்டவர் என்பதும் பெறப்படும்.யார் அவர்கள்? நாகர் என்ற பெயர்தான் பின் நாயர் என்று திரிந்துவிட்டது என்பது ஓர் ஆராய்ச்சிக் கருத்து. நாகங்களை வணங்கியதனால் அப்பெயர் எய்தினர் என்றனர். அதுவன்று! நயத்தல் என்பதன் அடியாகப் பிறந்த சொல்லே நாயரென்பது, நாகர் என்பது வேறு என்கிறது இன்னோர் ஆய்வு. நய+அர் = நாயர். முதனிலை நீண்டதென்பர். நாயக் என்ற சங்கத வடிவமும் வந்து குழம்புகிறது ! நாகரென்பார் மஞ்சள் நிறத்தவர், மங்கோலிய வழியினர் என்பதும் கூறுவதுண்டு. இராவணாதிகளைத்தாம் கேட்டறியவேண்டும். இப்போதுதான் நாகாலாந்து இருக்கின்றதே.... அங்குபோய்ப் பார்த்தால்..! அந்த நாகர்தாம் இந்த நாகரோ? ஆய்வு செய்யுங்கள்.

ஆக நாம் பாடலில் அறியவேண்டியது, நாக நாடு இராவண தேயத்திற்குப் பக்கத்தில் என்பதுதான். எனவே மேலது கீழது என்பன மேற்றிசை கீழ்த்திசை (West and East ) குறித்தனவாகவுமிருக்கலாம்.