வெள்ளி, 19 ஜூலை, 2013

TAMIL RAMAYANAS BEFORE KAMBAN

கம்ப நாடனின் இராமாயணம் பாடப்பெறு முன்னரே தமிழர் இராம சரிதையை நன்கறிந்திருந்தனர் என்பதற்குச் சான்றுகள் உள்ளன.தமிழில் இராமாயணங்களும் இருந்தன என்று தெரிகிறது. அந்த முழு நூல்களும் கிடைக்காவிடினும், சில செய்யுள்கள் உரையாசிரியர்களால் மேற்கோள்களாகக் கிடைத்துள்ளன. அப்படிக் கிட்டியவற்றுள் ஒரு செய்யுளை இப்போது காண்போம்.


“மேலது வானத்து மூவா நகரும்
கீழது நாகர் நாடும் புடையன
திசைகாப் பாளர் தேயக் குறும்பும்
கொள்ளை சாற்றிக் கவர்ந்துமுன் தந்த
பல்வேறு விழுநிதி எல்லாம் அவ்வழிக்
கண்நுதல் வானவன் காதலின் இருந்த
குன்(று)ஏந்து தடக்கை அனைத்தும் தொழிலுறத்
தோலாத் துப்பின் தாள்நிழல் வாழ்க்கை
வலம்படு மள்ளர்க்கு வீசி வகுத்தனன்
மாலை வெண்குடை அரக்கர் கோவே.


இங்கு அரக்கர் கோ என்றது இராவணனை. தோல்வியறியாத போர்த் திறனுடைய அவனது அடி நிழலில் தங்கள் வாழ்க்கையை அமைத்துகொண்ட போர்மறவரோ பலராவர். தான் வென்ற விழு நிதியம் பலவற்றையும் அவன்
அவர்கட்குப் பகிர்ந்து அளித்தான். அரக்கர் கோவாயினும் இரக்க குணம் படைத்தவனே அவன். 

கம்பரில்போல் விருத்தச் செய்யுளாய் இல்லாமல் இஃது ஆசிரியத்தால் பாடப்பட்டுள்ளது. கம்பர்காலத்தில் ஆசிரியம் அருகிவிட்டதென்பர்.

Also pl see:   http://bishyamala.wordpress.com/ for more posts on oher aspects of lit,



கருத்துகள் இல்லை: