செவ்வாய், 1 ஏப்ரல், 2025

தூதன் யார்? எதனால் இப்பெயர்? அடிச்சொற்கள்

தூதன் என்ற  சொல்லை அறிந்துகொள்வோம்.

தூதனைப் பற்றிய செய்திகள் நிறைய உள்ளன.  தூதன் என்பவன் அரசரிடைத் தொழில் புரிவோம் மட்டுமின்றி,  காதரிடையே சென்று செய்தி சொல்வோனையும் குறிக்கிறது. பாட்டில்,

செல்லா மனைக்குத் தூது சென்றுவா என்றேனோ

செய்யாத காரியம் செய்யவும் சொன்னேனோ 

என்று வருவதால் இறைவனிடமும் இறைவியிடமும் தூதுபோகிறவனுக்கும் இதே பெயர் உள்ளது.

ஒற்றன் என்பவனும் தூதன் தான் எனினும், அவனுடைய வேலை மறைமுகக் கண்டுபிடித்து அரசனுக்குச் சொல்வதாகும்.  சற்று மாறுதலான வேலை இதுவாகும்.

உ,  ஊ என்பன  சு சூ என்றும் து  தூ என்றும் திரியத் தக்கவை.  உ என்றால் முன் செல்வது.  அரசன் போகுமுன் செல்வதால் முன்செல்வதாகிறது.

ஊ >  தூ >  தூது.  இதில் து என்பது விகுதி.

இது ஒரு சுட்டடிச் சொல்  ஆதலால் தமிழ்ச் சொல்.  இதை நீங்கள் மேலும் கேட்டறிந்ந்து கொள்ளலாம்.

அறிக மகிழ்க.\

மெய்ப்பு பின் 


YOUR ATTENTION PLEASE


If you enter compose mode please do not make changes.


You may share this post with others through any social media. Copyright is waived for this post.. 


நீங்கள் எழுதும் பயன்முறையில் நுழைந்தால், தயவுசெய்து மாற்றங்களைச் செய்ய வேண்டாம். 


இந்த இடுகையை எந்தச் சமூக ஊடகங்கள் மூலமாகவும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். இந்த இடுகைக்கான பதிப்புரிமை விலக்கு அளிக்கப்படுகிறது.


ஞாயிறு, 30 மார்ச், 2025

Money Order name dont read

 

This is a temp record. Don't read. May not be relevant to you

[24/04, 08:02] Private Account: Name: SAID

Last name: KHEIRKHABAROVI

Country: Georgia 🇬🇪

City: Tbilisi 

Address: Tkviavi street 2

Zip code: 0102

Phone: +995 593108589

[24/04, 08:03] Private Account: My love here is the bank account details when you are done with the transfer, you can send me the slip okay

[24/04, 08:03] Private Account: Western union

அசோகப் பேரரசன் காலத்துத் தமிழ்த் திரிபுகள்



அசோகப் பேரரசனின் கல்வெட்டுக்களில் அதியமான் என்னும் தமிழரசனின் பெயர் திரிந்து காணப்பெறுகிறது. அயல் நிலங்களைச் சென்று சேர்ந்த சொற்கள் பல திரிந்துவழங்குதல் என்பது மொழிகளின் இயல்பு ஆகும். திரிதல் ஒன்றும் வியப்பை ஏற்படுத்தவில்ல்லை. போலிச்சொற்கள் விதிப்படியே திரிந்துள்ளன என்பதே இன்று இங்கு நம் கவனத்துக்குரிய தாகியுள்ளது.
அதியமான் என்னும் சொல் சதியபுத என்று அறியப்பட்டுள்ளது. அதிய என்பதே சதிய என்பது திரிபு.இது அகர சகரத் திரிபு, இது இலக்கணத்துடன் ஏற்புடைய திரிபே ஆகும். மான் என்பது எப்படி புத ஆனது? மான் என்பது உண்மையில் மகன் என்ற தமிழ்ச்சொல்லின் திரிபே. மகன் மான் இரண்டும் தமிழே. மகன் என்றால் புதல்வன் ஆதலால் அசோகப் பேரரசின் கல்விமான்கள் புத என்ற சொல்லின்மூலம் அவனைக் குறித்துள்ளனர்.
புத என்பது புதல்வன் என்பதிற் பாதிதான். வடதேசத்து மொழிகளில் அன் விகுதி இல்லை. ஆகவேதான் புது அல் வு அன் என்ற சொற்பகவுகளில் புது அல்> புத என்று சொல் நின்றுவிட்டது. புதல்வு, புதல் என்பன அசோகன் ஆட்சியின் மொழிவடிவங்கட்கு ஏலாதவை.
இந்தோ ஆரிய மொழிகள் என்று கூறப்பட்டாலும் அன் தவிர்த்த புதல்வு என்பது "சோல்வ்" என்ற ஆங்கிலச்சொல் போல் ஒலி ஏற்கப்படவில்லை என்பது தெளிவு,
புத என்பது அக் காலத்திய மொழியின் சொல்வடிவங்கட்கு ஏற்புடையதாய் இருந்துள்ளது எனற்பாலதையே இது திறம்படக் காட்டும்.
அறிக மகிழ்க
மெய்ப்பு பின்னர்



உங்கள் அன்பான கவனத்திற்கு

FOR YOUR KIND ATTENTION PLEASE

If you enter compose mode please do not make changes.

You may share this post with others through any social media. Copyright is waived for this post..

நீங்கள் எழுதும் பயன்முறையில் நுழைந்தால், தயவுசெய்து மாற்றங்களைச் செய்ய வேண்டாம்.
இந்த இடுகையை எந்தச் சமூக ஊடகங்கள் மூலமாகவும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். இந்த இடுகைக்கான பதிப்புரிமை விலக்கு அளிக்கப்படுகிறது.