வியாழன், 27 மார்ச், 2025

சிக்குதல் வினைச்சொல் வந்தது எப்படி?

நாம் தையல்வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது, சிலவேளைகளில் நூல் சிக்கிக்கொள்கிறது.  சிலர் சிக்கு எடுப்பதில் வல்லவர்களாக இருக்கிறார்கள்.  சிக்கை அவிழ்த்து நூலை முன்போலாக்கி தைத்துக்கொண்டிருப்பார்கள். அவர்களைப் புகழாமல் இருக்கமுடியாது  சிக்கு அவிழ்படாமல் போய்விட்டால் அது இறுகிச் சிறு உருண்டை போலிருக்க, மிச்ச நூல் பகுதிகள் இந்தப் பக்கமும் அந்தப் பக்கமுமாக  தொங்கிக்கொண்டிருக்கும், இப்போது சிக்குண்ட நூலின் மொத்த நீட்டமும் குறுகி இருக்கும்.  சிக்கிய இடத்தில் நூல் ஒரு சிற்றுருண்டை ஆகிவிடும்,   நூல் சிறிதாகிறது; சிக்கும் இறுகிச் சிறிதாகிறது,
சிறுகு >  சி கு >  சிக்கு என்று  சொல் அமைகின்றது.  
முதலில் றுகரம் கெடுகின்றது  (அதாவது  எடுபட்டு விடுகிறது. ). பிறகு சி கு என்ற இரண்டும் சேர்ந்து  சிக்கு என்ற வினைச்சொல் உண்டாகிறது. 
இந்தச் சொல் மொழி ஓரசைச் சொற்களைக் கொண்டு அமைந்த மிகப் பழங்காலத்தில்,  சி என்று மட்டும் இருந்திருக்கலாம்.  அதில் கு என்ற வினையாக்க விகுதி சென்று சேர்ந்து,  சி + கு > சிக்கு என்று அமைந்திருக்கலாம்..  இப்படிஸ் சொன்னல் அது சரிதான்,  ஆனால் சி என்ற  அடிப்படை  மூலச்சொல் இப்போது  அதன் பொருளைத்  தெளிவாகக் காட்டவில்லை,  ஆய்வின் மூலமே அறியமுடிகிறது.  
அப்படியானால் இதை அறியவிரும்புவோருக்கு எப்படி விளக்குவது?  சிறு என்ற சொல்லினின்று அதை விளக்கலாம். அதைத்தான் இங்கு செய்திருக்கிறோம்.
சீர் என்பதற்கு பலவேறு பொருட்சாயல்கள் உள்ளன.  சீர்வரிசை முதலியதும் சீர் என்று குறிக்கலாகும்,  பாக்களின் அசைகள் கொண்டு ஏற்படும்  பகுதிகளும் சீர் என்றே சொல்லப்படுகிறது.  இது பல்பொருளொரு  சொல்.
று என்பதும் ஒரு வினையாக்க  விகுதியே.  இதை பழைய இடுகைகளின் மூலம் அறியலாம்.
அறிக மகிழ்க.
மெய்ப்பு பின்னர்.

YOUR ATTENTION PLEASE

If you enter compose mode please do not make changes.

You may share this post with others through any social media. Copyright is waived for this post.. 

நீங்கள் எழுதும் பயன்முறையில் நுழைந்தால், தயவுசெய்து மாற்றங்களைச் செய்ய வேண்டாம். 

இந்த இடுகையை எந்தச் சமூக ஊடகங்கள் மூலமாகவும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். இந்த இடுகைக்கான பதிப்புரிமை விலக்கு அளிக்கப்படுகிறது.

வியாழன், 20 மார்ச், 2025

அதிசயத்தில் சாய்வதும் சரிவதும்

 இன்று  அதிசயம்  ஆச்சரியம் ஆகிய சொற்களின் தமிழ் மூலங்களைக் காண்போம்.

தமிழ் வீட்டினதும் அரசனினதும் மொழியாய் இருந்தபோது  சமஸ்கிருதம் என்பது தொழுமொழியாய் விளங்கியது. அரசன் கட்டிய கோயில்களிலும் வீட்டுக்கும் வெளியில் நிகழ்வுறும் சாமி கும்பிடும் நிகழ்ச்சிகளிலும் சமஸ்கிருதம் வழங்கியது. முதலில் ஒலியைக் கொண்டு இறைவனை வணங்கும் முறை மக்களிடை இருந்தது. இந்த ஒலிகள்  முதலில் ஏடுகளில் இல்லை. வெகுகாலம் ஏட்டுப்பதிவில் இல்லாதிருந்து ஒலிகளையும் இணைந்திருந்த  தொழுமணிகளையும் (verses of vEdas ) மறக்கத் தொடங்கி, பலவற்றை இழந்தபின்பே இவற்றைப் பாதுகாக்கும் எண்ணம் ஏற்பட்டுப் பதிவிடல் தொடங்கிற்று.  பதிவிடலால் ஒலிகளைச் சரிவரச் சொல்வதற்கு எந்த உதவியும் வரவில்லை. தெரியாதவர்கள் படித்து நன்கு  சொல்லமுடியாமல் கெடுத்ததனால், பலர் இந்த எழுத்துமுயற்சிகளை ஆதரிக்கவில்லை.  அதனால் சமஸ்கிருதத்திலும் பல பாடல்கள் அழிந்துவிட்டன. எஞ்சியதையே வேதவியாசன் பணியினால் நாம் பெற்றுள்ளோம்.

அதற்கென்று போற்றி வைத்திருப்போரை  நேமிக்க வேண்டி இருந்தது. ( காப்பியக் குடிபோன்ற பிரிவினர் தோன்றி மொழிகாத்து வேண்டிய நூல்களை இயற்றினர்.)

ஒரே களத்தில் இயங்கிய காரணத்தால் சமஸ்கிருதம் தமிழ் முதலிய பல பொதுச் சொற்களைக் கொண்டிருந்தன.  கடன்வாங்கிய சொற்கள் என்று குறிப்பதெல்லாம் இதை அறியாமையே ஆகும்.

அதிசயம் ஆச்சரியம் முதலிய சொற்கள் சமஸ்கிருதம் எனப்படுவன,  அவற்றின் மூலச் சொற்களைக் காண்போம்.

மிக்க வியப்பான ஒன்றைக் கேள்விப் பட்டவுடன்,  ஒருவிதச் சாய்வு உண்டாகிறது.  மனம் அந்தச் செய்தியின் பால் சாய்ந்து,  சிலர் நம்புவதும் சிலர் நம்பாமையும் ஏற்படுகிறது,  இது நேரன்மை ஆகும்,  அதாவது சாய்வு,  மனச்சாய்வு.

அதி சயம் என்பதில் சாய் + அம் >  சயம் என்று முதனிலை குறுகிச் சொல் அமைகிறது.  மனிதன் வியப்பின் பக்கம் சாய்வு கொள்கிறான்.

ஆச்சரியம் என்ற சொல்லிலும் சாய்வுக் கருத்தே உள்ளது,  சரிதல் என்பதும் சாய்வுதான்.  சரி + அம் > சரியம் ஆகிறது.

ஆதலின் சரிதல்  ஆச்சரியம் ஆகும்.  அதாவது வியப்பு,  சாய்தல் என்பதும் அது.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்.

தொடர்புடைய பதிவுகள்:

https://sivamaalaa.blogspot.com/2015/10/chayanam.html

அனந்த சயனம்

https://sivamaalaa.blogspot.com/2017/09/blog-post_18.html

சயனம்  சயனி  ஆந்தசயனம்

https://sivamaalaa.blogspot.com/2017/09/blog-post_18.html

சங்கதத்தில் தமிழ்\\


https://sivamaalaa.blogspot.sg/2015/10/chayanam.html

அனந்த சயனம்

YOUR ATTENTION PLEASE

If you enter compose mode please do not make changes.


You may share this post with others through any social media. Copyright is waived for this post.. 


நீங்கள் எழுதும் பயன்முறையில் நுழைந்தால், தயவுசெய்து மாற்றங்களைச் செய்ய வேண்டாம். 


இந்த இடுகையை எந்தச் சமூக ஊடகங்கள் மூலமாகவும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். இந்த இடுகைக்கான பதிப்புரிமை விலக்கு அளிக்கப்படுகிறது.


செவ்வாய், 18 மார்ச், 2025

புதிய காட்சியுரை: நாகரிகம் என்ற சொல்.

 இன்று       நாகரிகம் என்ற சொல்லை ஆய்வு செவோம்.  அதனுடன்  "நாகரீகம்" என்ற சொல்லையும்  சேர்த்துக்கொள்வோம்.  இதில் ஓர் எழுத்து  ( ரீ ) நெடிலாக வருகிறது.  இரண்டு வடிவங்களும் அகரவரிசைகளில் காணப்படுதலால் ஒன்று சரி மற்றது பிழை என்னாமல் இரண்டையும் ஆய்வுக்கு உட்படுத்திப் பொருளுரைக்க முடியுமா என்று பார்ப்போம்.\

முன்னர் ஒரு காலத்தில் நாகரிகம் என்பது என்ன சொல் ( தமிழா அல்லது சமஸ்கிருதமா )  என்று தெரியதநிலை இருந்தது.  மேலும் தமிழ் நூல்களில் நாகரிகம் என்று சிலவற்றிலும்  நாகரீகம் என்று சிலவற்றிலும் இந்தச் சொல் பயின்று வழங்கியது. இரண்டுக்கும் ஏறத்தாழ ஒரே பொருள் கூறப்பட்டமையின், இரண்டில் ஒன்ரு வழு என்றும் தமிழாசிரியர்கள் எண்ணினர்/  அதனால் நாகரீகம் என்பது "வழூஉச்சொல்" என்ற  கருத்தும் நிலவியது. இதுதான் முன்னைய நிலைமை .

தமிழ்ப்  பேரகராதி வெளியிட்ட  சென்னைப் பலகலைக்கழக புலவர்கள் இரு வடிவங்களிலும் இந்த நாகரிகச் சொல்லைக் கண்டு பதிவிட்டிருந்தனர். பேரகராதிக்கு முன்வந்த அகரவரிசைகளில் இரு வடிவங்களும் காணப்பட்டன.
இது நகர் என்ற சொல்லினின்று வந்ததாகவே தேவநேயப் பாவாணர் சொல்கிறார்.  என்றாலும் இது  நாகர் என்ற சொல்லினின்றும் வந்ததாகவுமே சொல்லப்படுவதுண்டு.  நாகர் மிக்க நாகரிகம் அடைந்திருந்தனர் ( அதாவது நகரவாசிகளாக  இருந்தனர்) என்றும் விளக்கினர்.

இதை இங்கு வேறு கண்டுபிடிப்புகளுடன் நாம் கூறுகிறோம்.

நாகரிகம் என்ற சொல்லின் பகவுகளைக் காண்போம.

இதை நகுதல் என்ற சொல்லினின்று  தொடர்கிறோம்.  நகுதல் என்றால் ஒளிசெய்தல்.  நகு என்பது நாகு என்று மாறுகிறது.  இதில் முதனிலை நீண்ட தொழிற்பெயர்.  நக்கத்திரம் > நட்சத்திரம் என்ற சொல்லும் நகுதல் என்ற சொல்லினின்றே வந்ததாக புறநானூற்றுச் சொற்பொழிவுகள் செய்த பேராசிரியர்கச் ஒப்புக்கொண்டனர்.
 
1952;  புறநானூற்றுச் சொற்பொழிவுகள். சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழக வெளியீடு, காண்க.

அடுத்தசொல் அரு ( அருமை) என்ற சொல்லாகும்..  \இரண்டும் சேர்த்து நாகரு என்று ஆகும்.

இகம் என்பது ஒரு விகுதி.  இதற்குச் சொல் என்ற அளவில்  இகுத்தல் என்பதிலிருந்து வந்தது என்பதே சரி.  இகுத்தல் என்ற கொடுத்தல் அல்லது ஈதல்.  ஆகவே கொடுப்பது என்பது பொருளாகிறது.  இதற்குப் பல பொருண்மைகள் கூறப்படுவதால் வேறு சொற்களில் விகுதிக்கு வேறு பொருள் வரக்கூடும்.  விகுதிகள் பொருள் இல்லாமல் வேறு சொல்லமைப்புக்கு உதவுதாகவும் இருத்தல் உள்ளது.

நாகரு+ இகம் >  நாகரிகம் ஆகிறது\\

நாகரீகமென்பது பாடல்களில் இசைமுறிவு ஏற்பாடாமல் இருக்க  நீட்டுதல் என்று முடிக்கவேண்டும்.  அதற்கு வேறு பொருளில்லை. பொருள் இதுவேதான் என்று உணர்க.

விண்ணானம் என்பது நாகரிகத்துக்கு இன்னொரு சொல். இதில் விண் ( ஆகாயம்) என்னும் பொருள் உள்ளசொல் நாகரிகத்துக்கு ஈடான சொல்லாகக் கொள்ளப்பட்டிருப்பதால் ஒளி குறிக்கும் ஒரு சொல் நாகரிகத்துக்கு ஆளப்பட்டிருப்பதும்  ஏற்புடையதே என்று உணர்க.

நாகரிகமென்ற சொல்,  திருக்குறளில் உள்ளது:  குறள் வருமாறு:

பெயக்கண்டு நஞ்சுண் டமைவர் நயத்தக்க
நாகரிகம்  வேண்டு   பவர் 

என்பது குறள். இது  இலக்கிய வழக்கு உள்ள சொல் என்பதும் அறிக.  இது ஒரு பல்பிறப்பி என்றும் உணர்க

அறிக மகிழ்க

மெய்ப்பு: பின்னர்.
"அதிசயத்தில் சாய்வதும் சரிவதும்" நாளை வெளிவரும். படிக்கத் தவறாதீர்.