செம்படவருள் ஒரு பிரிவினர் கடலில் மூழ்கி முத்தெடுப்பார்கள். இவர்களுக்கு முக்குவர்கள் என்று பெயர்.
பண்டொரு முக்குவன் முத்தினு போயி
படிஞாறன் கடலத்து முங்ஙிப் போயி
என்ற கவி வயலார் மலையாளப் பாட்டிலிருந்து இதைத் தெரிந்துகொள்ளலாம்.
முழுகுதல் என்பதுபோலவே முழுக்குதல் என்பதும் ஒரு வினைச்சொல். இந்த இரண்டாவது வினைச்சொல் இடைக்குறைந்து முக்குதல் என்ற வினை அமையும். மூழ்கி முத்து எடுத்தலை முக்குவர் செய்வர்.
முழுக்குதல் என்பதில் ழு மறைந்தது போலுமே வாழ்த்தியம் என்பதில் ழ் குன்றி வாத்தியம் என்றாகும். யகர ஒற்றும் இவ்வாறு குறையும். சாய்த்தல் என்றால் வெற்றியுடன் ஒன்றைச் செய்தல். சாய்த்தியம் என்பதில் யகர ஒற்று மறைந்து சாத்தியம் என்று ஆகும், சாய்தல்:> சாய்தித்தல் > சாதித்தல் என்று ஆகும். சாதித்தல் முதலியவை தமிழ்வினைகளே. ஆய்> ஆய் + தாய் > ஆத்தா என்றாவதில் இரண்டு யகர ஒற்றுக்களும் கெட்டன.
அறிக மகிழ்க
மெய்ப்பு பின்னர்