ஊர் என்பது ஊர்ந்து ஊர்ந்து பெரிதாவதான குடியிருப்பிடம் என்று விளக்கப்பட்டிருப்பினும், ஊர்த்துதல் ( verb) என்றும் ஒரு வினைச்சொல் உள்ளது. ஆகவே ஊர் என்ற வினைப்பகுதியை ஆய்கின்ற பொழுது இதை ஏன் ஊர் என்ற பெயர்ச்சொல்லின் தொடர்பில் விளக்கவில்லை என்ற கேள்வி எழுவது இயல்பு ஆகும்.
ஊர் என்ற சொல், நாகூர், இந்தூர், போரோபுதூர், ஜொகூர் என்று பன்மொழிச் சொற்களிலும் காணப்படுகிறபடியால் தமிழின் தாக்கம் எல்லை தாண்டி எங்கும் காணப்படுவதொன்று என்று அறியலாகும். ஊர் என்பது இடப்பெயர் ஆதலினால், அங்கோர் வாட் என்ற சொற்றொடரில் அங்கோர் என்பது உண்மையில் ஊர் என்பதேயாகும் என்பதும் ஊகித்தற்குரியது ஆகும்.அங்கூர் > அங்கோர் ( அங்கு ஊர் )
.புரி என்ற சொல்லும் இவ்வாறே பெருநகர் குறிக்கும் புரி என்பதே. ( நாகபுரி > நாக்புர் )
ஊர்த்தல் என்பதற்கு ஊற்றுதல் என்ற பொருள் உள்ளது.
ஊர்கள் பெரும்பாலும் கொஞ்சம் மேடான பகுதிகளில்தாம் அமைக்கப்பட்டு வந்தன என்பது அறியலாம். இவ்வாறு நடந்தால்தான் மழைநீர் வடிந்து ஊருக்குள் வெள்ளப்பெருக்கு இல்லாமல் இருக்கும் என்பது அறிக, இதற்கேற்ப, ஊர்த்துவம் என்பது மேல் என்று பொருள்பட்டு, மேட்டுப்பகுதியைக் குறிக்கின்றது. ஊர்த்தம் என்பதும் அது.
கால்கள் மேலெழுந்தவாறு செய்யப்படும் பத்மாசனம், ஊர்த்துவ பதமாசனம் எனப்படுவதும் காண்க,, உடல் தலைகீழாக மேலெழுவதனால், உடல்நீர்வகைகள் ஊற்றும் பாங்கில் இருக்கும்,
ஊர்த்துவம் என்பது தமிழ் மூலங்களால் ஆன சொல்.
பிற பின்.
அறிக மகிழ்க
மெய்ப்பு பின்
This post is corrupted with dots. To edit. 30062023