சித்திரக் குள்ளனென்ற சொற்றொடரைக் கேள்விப்பட்டிருக்கிறோம். இப்பெயர் "சித்திரம்" என்ற தமிழில் வழங்கும் சொல்லையும் நம்முன் கொணர்ந்து நிறுத்துகிறது.
இதன்மூலம் நாம் நினைப்பது என்னவென்றால், இந்தக் குள்ளன் சித்திரத்தில் வரும் குள்ளன் போன்று சிறியவனாய் இருப்பான் என்பதுதான்.
ஆனால் சித்திரத்தில் வருபவன், நாம் காணும் சித்திரப் படிகளத்தினை விடப் பெரியவனாய் இருந்துவிட முடியாது. இந்தச் சித்திரத்தினோடு ஒப்பிடும் வெளியிற் கண்டு நாம் வியந்த குள்ளனோவெனின், உருவப் பருமை, உயரம் என இன்ன எல்லாவற்றிலும் வேறுபட்டிருக்கக் கூடும்.
சித்திரக் குள்ளனென்போன் உண்மையில் சிறுதிறக் குள்ளன் > சிறுத்திரக்குள்ளன் > ( இது இடைக்குறைந்து ) சித்திரக் குள்ளன் ஆனது.
சிறுத்திருகிற குள்ளன் என்று வாக்கியமாய் வரும்..
இன்னும் சில கேளிக்கைகளயும் சுட்டிக் காட்டலாம் என்று நினைத்தேன். நேரத்தை மிச்சம் செய்வோம்.
சிறுத்தல் என்ற வினையையும் உள்ளிட்டு விளக்குதல் கூடும்.
அறிக மகிழ்க.
மெய்ப்பு பின்.