வெள்ளி, 30 ஆகஸ்ட், 2019

ஸ்மரண என்ற நினைவுநிலை.

மனிதன் நினைவு நிலைத்திருக்கும்போதே இறைவனை நினைந்துருகித் தன் ஆன்மாவுக்குப் பற்றுக்கோட்டினைப் பெற்றுக்கோடல் அறிவுடைமை ஆகும். அவன் நினைவிழந்து நீங்கும் நேரத்தில் இஃது வாய்ப்பதில்லை.

ஆகவே நினைவுநிலை என்னும் ஸ்மரணம்  மிக்க முன்மை வாய்ந்ததாகிறது.

இப்போது இச்சொல்லை  அறிந்தின்புறுவோம்.

சுருக்கமாக:

மற அறு அணம்

அதாவது மறத்தலை அறுத்த நிலை.

அணம் என்பது  நிலை குறிக்கும் விகுதி.

அறு  அணம் என்பன  அறணம்  ஆகிறது.

மற அறணம்  >  மறணம்   ( மறறணம் >  மறணம் :  ஈரெழுத்துக் கெட்டன  )

வகர உடம்படுமெய் தமிழில் இரு முழுச்சொற்கள் புணர்வில் வரும்.  பிற மொழிப்புனைவில் மற்றும்  தமிழ்ச் சொல்லமைப்பிலும் வராதும் போம். பழைய இடுகைகள் காண்க.  மறணம் என்பதை   ஸ்மரணம்  ஆக்க அழகிய சொல் கிட்டிற்று.

இனி இப்புனைவில்  பகுதி + பகுதி + விகுதி என்று சொல்லானது பழமை நெறியினாலே அமைவுண்டு  அது  பிறப்பிக்கப்பட்ட பின்புதான் முறைப்படி
தேவையற்ற ஒலிகள் விலக்குண்டன என்பதும்  அறிக. தலையெழுத்தே பிற்சேர்க்கை ஆயிற்று.  இஃது  இரு பகுதிப் புனைவு,

இதுவே நினைவு நிலையைச் சுட்டும் சொல்.




வியாழன், 29 ஆகஸ்ட், 2019

யகர ஒற்று இடைக்குறைந்த தமிழ்ச்சொற்கள்



தோய் >  தோய்து >  தோது.
(தோதில்லை என்றால், அத் தொடர்பில்ஈடுபடத் தருணமில்லை  )



தோய்+சை =  தோய்சை >  தோசை.
வேய்+ து + அம் = வேய்தம் > வேதம்.(  மறைமலையடிகள்)
உய் + (த்) + தி =  உய்த்தி >  உத்தி.
வாய்+ (த்) + தி = வாய்த்தி>  வாத்தி.  (வாய்ப்பாடம் சொல்வோன்).
சாய்+ (த்) +  இயம் = சாய்த்தியம்> சாத்தியம்.
சாய்த்தல் -  (வெற்றியுற முற்றுவித்தல்) 
(அரிச்சந்திர புராணம்,) ( மற்றும் வழக்கு)
பெய் + தி =  பெய்தி> பேதி.
(பெய்தல் =உடலினின்று கழித்தல். ஒ  நோ :   தூறுதல் (மலையாளம்) :மலம் கழித்தல்.)
வாய் + (ந்)+ தி =  வாய்ந்தி > வாந்தி.
பொய்+மெய் = பொய்ம்மெய் > பொம்மை.
வாய்தம் > வாதம்
.செய்தி -  சேதி   இதுவும் ஏற்கலாம்
இன்னும் பல

புதன், 28 ஆகஸ்ட், 2019

முச்சறிக்கை.

உடல் நலக் குறைவின் காரணமாக சில நாட்கள் எழுதவில்லை. நிலைமை இன்னும் சரியாக வில்லை.

என்றாலும் இன்று ஒரு சொல்லைத் தெரிந்துகொள்வோம்.

நாம் கவனிக்கப் போகும் சொல்  "முச்சறிக்கை"  என்பது.

பேசி முடித்தபின் ஏற்பட்ட உடன்பாட்டை வெளிப்படுத்துவதே "முச்சறிக்கை" ஆகும்.

கருத்து  -   முடித்து  அறிவித்தல்.
முடித்தறிக்கை
முச்சறிக்கை.
இங்கு டிகரம் மறைந்தது.
தகரங்கள் சகரங்கள் வருக்கமாயின.

எளிமையான திரிபுதான்.

முச்சரிக்கை என்பது வழு.