ஞாயிறு, 28 ஜனவரி, 2018

ஆலோசனைச் சொல் ஆலமர அருமை

ஆலோசனை என்பது ஆய்வுசெய்து ஆனந்தமடையத் தக்க சொல்.

ஆல மரம் தமிழர் வாழ்வில் ஒரு சிறந்த இடத்தைப் பிடித்துக்கொண்டுள்ள மரமாகும்.  முழுமுதற் கடவுளான சிவபெருமானும்  ஆல் அமர் கடவுள் (ஆலமர் கடவுள்) என்று சிறப்பிக்கப்படுவோன் ஆவன்.  சிவ என்பது செம்மை குறிப்பது. செம்மை என்பது ஒரே பொழுதில் சிவப்பாகிய நிறத்தினையும் நேர்மையாகிய குணத்தினையும் குறிக்கவல்ல சொல்லாம் என்பது நீங்கள் அறிந்ததே ஆகும்.

பல பெருங்கோயில்களின் தொடக்கம் மர நிழலில் அமைந்தது என்பது வரலாறு கூறும். முருகப் பெருமான் கோயிலாகிய மலேசியாவின் மரத்தாண்டவர் ஆலயம் ஒரு மரத்தடியில் அருள்பாலித்த கடவுட்கு எழுந்த புண்ணியத் தலமாகும். இன்று அது பெருந்தலமாய்க் காட்சிதருதல் மகிழினிய நிகழ்வினதாகும். சென்று ஆங்கு வணங்கி யாம்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்.  சிவம் வேறு முருகன் வேறு அல்லவென்பது அருணகிரியார் அருள்மொழியாகும்.

இத்தகு ஆலமரத்தடியில் அமர்ந்தே பண்டை மக்கள் சிந்தனைகளில் ஈடுபட்டனர்.  இந்தப் பண்டை நிகழ்வையே ஆலோசனை என்ற சொல் இன்றும் காட்டுகிறது.

ஆலடியில் ஓய்ந்து சிந்திக்க.  ஓய்தல் = சிந்தித்தல்.  ஆய்ந்து ஓய்ந்து சிந்தித்து என்ற தொடரையும் கருத்தில் கொள்க.

ஓய்தல் . வினைச்சொல்.
ஓய்+  அன் + ஐ =  ஓயனை.
ஓயனை > ஓசனை > யோசனை.

யகர => சகரத் திரிபு.  ஒ.நோ:  வாயில் -  வாசல்.  நேயம் > நேசம். தோயை > தோசை.  காய்> காய > காச நோய். (  உடல் காயும் நோய்).   வேய் > வேயி > வேசி.   எனப்பலப்பலவாம்.

காய (காய்தல்) எச்சவினை, உடல் காய்ச்சலையும் இளைத்தலையும் ஒருங்கு குறிக்கவல்ல குறியீடாகிறது என்பது காண்க. காய்ந்தது சுருங்கும்.

அகர வருக்கம் யகர வருக்கமாம்.  ஆனை = யானை.
ஆலமரத்தடியில் யோசனை நிகழ்த்துதலே ஆலோசனையாகும்.
ஆல் யோசனையே ஆலோசனை.  முன்மைச்சொல் ஓசனை. மரம்: ஆல்.

அறிந்து மகிழ்வீர்.

This document may have some unwanted autocorrect errors and dots self-generated after posting. This can only be corrected after a lapse of time after the activity becomes “spent”.  Regrets.



ஒட்டுநோய் : தொடர்வரவு வாய்ப்புண்கள்

தொடர்வரவு வாய்ப்புண்களைப் பற்றி அறிந்துகொள்வது
நன்மை பயக்கும்.  முத்தமிடுதல் போன்றவை நோய்
நுண்ணுயிர்களைப் பரப்பிவிடுமாதலால் கவனமாய்
இருத்தல் நலம்.

இப்பிணிபற்றி இங்கு சென்று அறிந்துகொள்ளுங்கள்:
(சொடுக்கவும்).

https://www.healthline.com/health/fever-blister-causes

Recurrent Herpes Simplex Labialis

பலர் உண்ணும் இடங்களில் கவனம் தேவை.


எந்நிலையிலும் தேர்வுபெற்ற மற்றும் பட்டறிவுள்ள மருத்துவரை
அணுகி ஆலோசனைகள் பெறவும்.





சனி, 27 ஜனவரி, 2018

வயிறு வாய்த்தொடக்கம்


இன்று ஞாயிற்றுக்கிழமை. வீட்டில் சமைத்து வயிறார உண்டு சற்று உறங்கி எழுந்திருந்தால்,  நீங்கள் வாழ்க வாழ்க.

பல சொற்களின் அமைப்பையும் அறிந்துகொண்டு, வயிறு என்பதன் அமைப்பைக் கண்டறியாமல் இருத்தலானது, அஃது எதையும் அறிந்துகொள்ளாமைக்குச் சம்மானதாகும். இதயத்தினும் வயிறு முன்மை பெறுகிறது. ( முன்மை என்றால் முன்னிருக்கும் தன்மை. முதன்மை என்றால் எண்ணிக்கையில் ஒன்றாவதாக இருக்கும் தன்மை. அதற்கப்புறம்தான் இரண்டு மூன்று நான்`கு என்பனவெல்லாம். )

வாயிலிருந்துதான் உணவுக்கான வழி தொடங்குகிறது.  இந்த நீண்ட வழி பின் சென்று முடிந்தாலும், உணவு குடலில் தங்கிப் பிறகுதான் கழிநிலையை அடைகிறது.  அது தங்குமிடமாகிய குடலே உணவின் இறுதியிடம் என்று கொள்ளவேண்டும்.  பலமணிநேரம் தங்கிப் பின் இறங்கும் பயணத்தைக் கணக்கில் எடுத்துக்கொள்ளுதல் ஆகாது.  காரணம் இனித் தேவையில்லாமையினால் மேற்கொள்ளும் பயணமதாம்.

வாய்  -  தொடங்குமிடம்.
இறு -  முதற்பயணம் நின்று, செரிமானம் ஆகும் வேலைகள் நடைபெறும் முடிவிடம்.  இறு >  இறுதி.  என்றால் இறுதியிடம்.

மலக்குடல் இக்கணக்கில் விலக்கு என்று முன்னரே விளக்கப்பட்டது.

வாய் + இறு >  வாயிறு > வயிறு.  (  உணவு சென்று தங்கும் உடலின் பகுதி)
வா என்ற எழுத்து வ என்று குறுகிற்று.  இப்படிப் பல சொற்கள் குறுகி அமையும்.  இதை எம் பழைய இடுகைகளைப் படித்துக் குறிப்புகள் எடுத்துக்கொள்ளுங்கள்.  மறந்திருந்தால் ஒன்றிரண்டு குறிப்போம்:

சாவு + அம் = (சாவம்) > சவம்.
கூம்பு + அம் =  (கூம்பம்) > கும்பம்.
தாள் +  அம் =   தளம் (>  தளபதி ).       தாளம் என்பது இன்னொரு சொல்.

சாவம்  கூம்பம் என்பவை அகரவரிசைகளில் இரா.  ஏனென்றால் அவை
கருவிலிருப்பவை; இன்னும் பிறக்காதவை.  சவம், கும்பம் என்பவை நிறைமாதமானவை.  முன்னவற்றை இடைநிலை வடிவங்கள் என்று குறிப்போம்.

இனி அப்பொருள் மேற்கொள்ளும் பயணம், கழிவுச்செலவு ஆகும். அதன் இறுதி குதத்தில்  முடியும்.  அது தரையில் குந்தும் பகுதியில் உள்ளது.
குந்து > குந்துதல் (  அமர்தல் ).

குந்து  >  குது (  இடைக்குறை ) > குது + அம் =  குதம். 

சொல் அமைப்புப் பொருள் : தரையில் குந்தும் உடலின் பின்பகுதி.

வாய் என்ற தமிழ்ச்சொல், உலக சேவையில் உள்ள சொல்.  வய   via  என்று இலத்தீன் அதைப் பெற்றுக்கொண்டது.   இறுதியாக  அது   வே  way என மாறி, ஆங்கிலம் அதை ஏந்திக்கொண்டது.  இது இந்தோ ஐரோப்பியத்தில் ஆதிக்கம் செலுத்துகிறது.

தமிழிலும் பல சொற்களில் முன் துண்டாகவும் பின் துண்டாகவும் பயிலுமாறு காண்பீர்.

உணவை வைக்குமிடமே வாய்.  வை> வாய்.  எதையும் தொடங்குமிடம் வைப்பிடமாகும்.

அறிந்து களிப்புறுக.

திருத்தம் பின்பு.