வியாழன், 8 ஜனவரி, 2015

apparam and appuRam

அப்புறம் என்ற தமிழ்ச்சொல், பேச்சு வழக்கில் அப்பரம் என்று திரித்துப் பேசப்படுகிறது.  இதில் வரும் பரம் என்பது,  தவறான பலுக்குதலால் (உச்சரிப்பால்) விளைந்ததொன்றே.  இதற்கும் தெய்வமென்று பொருள்படும் "பரம்" என்ற சொல்லுக்கும் ஒரு தொடர்பில்லை.

அப்பரம் என்றால் பிறகு என்று பொருள். அப்புறம் என்பதும் அது.

அப்பரம் என்றது அப்பர ஆகியது.

appara >   posterior , later , latter  ;  following ; western ; inferior , lower  ; other , another .

தமிழ்ப்பேச்சு வழக்கு, சந்த மொழிக்கு வழங்கிய சொற்களில் இதுவுமொன்று ஆகும்.  வேறு விதமாகச் சொல்லை அணுகி, இதை மறைத்துவிடலாம்.


Sharing disabled?

Sharing of our posts through Google appears to have been disabled. But this is not disabled by us.
Please use your own way of reaching this blog.

அபாரம் என்னும்............


இனி அபாரம் என்னும் அபாரமான பொருள்கொண்ட சொல்லைச்  சற்று ஆய்வது பொருந்துவதாயிருக்கும்.

மக்கள் பேசும்போது : "அவன் அடி அடி என்று சரியா(க)ப் பின்னிவிட்டான்,   "   "கொளுத்து கொளுத்து என்று கொளுத்திவிட்டான்"  "சும்மா விடுவானா?  கடை கடை என்று கடைந்து விட்டான்" என்றெல்லாம் பல்வேறு வகைகளில் சொற்சித்திரம்போல் பேசுவர். அபாரம் என்பதும் இவ்வகையில் அமைந்த சொல்லே ஆகும்.

இவ்வாறெல்லாம் இன்றி,  ஒரு படிவமொழியிலேயே பேசிக்கொண்டிருந்தால் வாழ்க்கையில்தான் ஏது சுவை?

அவிக்கவேண்டியதை அவி அவி என்று நன்றாக அவிக்க வேண்டும். கொழுக்கட்டை எப்படி என்றவர்க்கு,  அப்போதுதான் அபாரம் என்று நாம் சொல்லமுடியும். அதாவது நன்றாக வெந்த கொழுக்கட்டை  என்பது.

அவி > அபி.  (அவித்தல்).
ஆர் =  நிறை(வு).   நிறைதல்.  வளைதலும் ஆகும்.
அம் என்பது ஒரு விகுதி.

அவி+ ஆர்+ அம் >  அபி +ஆர்+அம் = அபாரம்.

வேறு வகைகளிலும் இதனை ஆய்ந்துள்ளனர்.  தொடரும்.