இன்று பயம் என்ற சொல்லை ஆய்வு செய்தல் நண்ணுவோம்.
பைம்மை என்பது இளமைக்காலத்தைக் குறிக்கும். பை> பையன், இது இளவயதினனைக் குறிக்கும் சொல். இச்சொல் முன் தமிழில் பையல் என்றிருந்து பின்னர் பையன் என்று அன் விகுதி பெற்றது. லகர ஒற்றால் இறுதி பெற்று, பின்னர் னகர ஒற்றால் முடியும் சொற்களில் பையன் என்பதும் ஒன்றாகும். பையல் > பையன் ;
பையல் > பயல் என்றுமாகும். ஐகாரக் குறுக்கம் தொல்காப்பியத்தில் சொல்லப்படுகின்றது. சொல்லாக்கத்திலும் இக்குறுக்கம் நிகழும்.
ஒருவன் பையனாக இருக்கும்போது, எளிதில் அவனைப் பயமுறுத்திவிடுதல் கூடும். அச்சமின்றி நடந்துகொள்வது எல்லாப் பையன்களாலும் இயலுவதில்லை. சொற்கள் பெரும்பாலும் பொதுப்பண்பு கருத்தியே அமைபவை. இவ்வாறு, பயம் என்ற சொல் அச்சத்தைக் குறிக்கலாயிற்று. இதன் அடிச்சொல் பை என்பதே.
இதே அடியிலிருந்து பைத்தியம் என்ற சொல்லும் வந்துள்ளது. இது:
பை - இளமை குறிக்கும் அடிச்சொல்.
பை+ து > பைத்து பொருள்: இளந்தன்மை காரணமாய் எழுவது.
பைத்து + இ+ அம் > [பைத்தியம். இளமையினால் அல்லதூ முதிர்வின்மையால் எழும் மனநோய்.]
''ஆளும் வளரணும் அறிவும் வளரணும்'' என்று பாட்டில் சொல்வதுபோல் ஆள் வளர்ந்தும் அறிவு பைம்மை நிலையில் இருப்பதுதான் பைத்தியம்.
பயில்தல், பயிற்றுதல் என்ற சொற்களும் பைம்மை அடியாகப் பிறந்தவையே.
பை> பயம் என்பதே இதன் பிறப்பு. பயன் என்ற சொல் பயம் என்றும் வரும். அதை வேறு சொல்லாகக் கொள்ளலாம். இங்குப் பயிர் என்ற சொல்லையும் இணைத்துப் பொருள் சொல்லலாம் எனினும் அதை வேறோர் இடுகையில் செய்வோம்.
அறிக மகிழ்க
மெய்ப்பு பின்னர்
பகிர்வுரிமை,