லகரம் சொல்லில் ரகரமாக மாறிவிடும் என்பது நம் பல இடுகைகளில் முன்னர் சொல்லியிருத்தலைக் காணலாம். இம்மாற்றங்களில் பலவற்றை மிக்க நுட்பமாக ஆய்வு செய்தால் இந்தத் திரிபு மனப்பாடமாக மறக்க முடியாததாகி விடும் என்பது தெளிவு.
இவ்வகைத் திரிபு மிக விரிந்த தாக்கமுடையது ஆகும்.
பழந்தமிழில் லகர ஒற்றில் முடிந்த சொற்கள் பலவிருந்தன. வள்ளல் என்ற சொல் இன்னும் வழக்குடையதாய் உள்ளது. நாளடைவில் அல் என்று முடிந்த மனிதனைக் குறிக்கும் சொற்கள் அல் என்று முடியும்படி இல்லாமல் அர் என்று முடிவெய்தின. இளவல் என்ற சொல்லை எடுத்துக்கொள்ளலாம் . தம்பி என்று பொருள்படும் இச்சொல் இறுதி லகர ஒற்றில் முடிந்தது. இதுவும் எப்போதாவது உயர்ந்தோர் (கல்வியாளர்கள்) நடையில் தோன்றி மகிழ்விக்கும். தோன்றல் என்ற சொல்லும் மிகப்பெரியோன் என்று பொருள்தருவது. வேறு பொருள் உண்டாயினும், இது லகர ஒற்றில் முடிதலைக் கண்டுகொள்க.
இங்கு காட்டப்பெற்றவை சொல்லின் இறுதியில் வரும் லகர ஒற்று. லகர ரகரங்கள் சொல்முதலாக வருவதில்லை. ( மொழிமுதல் என்பர் இலக்கணியர்).
உலாவுதல் என்பது உராவுதல் என்றும் வந்ததற்கான இலக்கியம் உண்டு என்பதறிக. இத்திரிபு லகர ரகரத்தது ஆகும்.
லகர ரகரத் திரிபுகள் பிறமொழிகளிலும் காணப்பெறுவது ஆகும்.
அறிக மகிழ்க.
மெய்ப்பு பின்னர்
பகிர்வுரிமை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக