துரியோதனன் தான் கல்வி கற்கும் காலங்களில் சிறப்புடையோனாகத் திகழ்ந்ததாகவே தெரிகிறது. தான் கசடறக் கற்றதுடன், பிறருக்கும் போதித்த பெருமையோன் என்பது தெளிவு. துரியோதனன் என்ற பெயர் இயற்பெயராகத் தோன்றினபோதிலும் இது தமிழ் மூலங்களை உடைய சொல் என்பது எமக்குத் தெளிவாய் உள்ளது. நீங்கள் இதை உடனடியாக ஏற்கவேண்டியதில்லை, ஆய்வு செய்து ஏற்கலாம் அல்லது புறந்தள்ளிவிடலாம். இவ்வாறு செய்வது உங்கள் ஆய்வுரிமை.
துரியோதனன் கல்வியிற் சிறந்தோன். அவன் '' துருவி ஓதுநன்'' ஆவான்.
ஒன்றைத் துருவி துருவிக் கற்று மனத்தில் அமைத்துக்கொள்பவன்.
துருவி ஓதுநன் > துருவோதுநன் > துரியோதன > துரியோதனன்.
பாண்டவர் என்பதற்கும் பாண்டியர் என்பதற்கும் உள்ள ஒலியொற்றுமையை கவனித்துக்கொள்ளுங்கள். உடன்வீழ்க என்று யாம் சொல்லவில்லை.
இதை வேறு யாரும் சொல்லியிருக்கிறார்களா என்று யான் அறியவில்லை. அவர்களை மேற்கோள் காட்டவும் எண்ணவில்லை.
ஒன்றை நன்றாகத் துருவி ஆய்ந்து அறிந்தபின் அவன் அதை ஓதும் பண்பினன். அவன் அதைப் பின் ஒலிப்படுத்துவான். தன் செவிகட்கும் அவன் ஓதுவான்; பிறருக்கும் ஓதுவான் ( ஓதுவிப்பான் /கற்பிப்பான்).
அறிக மகிழ்க
மெய்ப்பு பின்னர்
பகிர்வுரிமை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக