ஞாயிறு, 22 ஜூன், 2025

வாயு அல்லது வாய்வு

 வாயு என்ற சொல்லைக் கவனிப்போம்.

வாய்த்தல் என்பது  வினைச்சொல். இது கிடைத்தல், கிட்டுதல் என்றிதற்குப் பொருள் கூறலாம். பெறுதல் என்று கூறவும் இடமுண்டு.  வாய் என்ற சொல்லுக்கு இடமென்ற பொருளும் இருக்கிறது.

வாய்வு என்பது உடலின் ஓரிடத்தில் அல்லது அதற்கு மேற்பட்ட இடத்தில் உண்டாகி ஒருவித வலியையும் உண்டாக்கும் ''காற்றுத் தொல்லை என்று சொல்வார்கள். ஆங்கில வைத்தியத்தில் இதற்கு வேறு விளக்கங்கள் தரப்படும்.

இந்த ''வாய்வு'' உடலிலே உள்ளதன்று,  அது சில உணவுப் பழக்கங்களினால் வாய்க்கப்பெறுவது என்று சிலர் எண்ணினர். எடுத்துக்காட்டாக,  கடலைப் பருப்பு அதிகம் எடுத்துக்கொள்வதால் இது ஏற்படும் என்ற ஐயப்பாடும் உள்ளது.  ஆகவே வாய்க்கப்பெறுவது என்ற பொருளில் 'வாய்வு'' என்றனர்.  சமஸ்கிருதமும் இதற்கு இதே அடிச்சொல்லைக் கொண்டு  ''வாயு''  என்ற சொல்லை உருவாக்கியது.  வகர மெய் விடப்பட்டது.  வாய்வு என்னாமல் வாயு என்றனர்.

இந்த வாய்வுத் தொல்லை என்றால் அது வாய்க்கப்பட்டது என்பதுதான் பொருள்.

பாவாணர் இதை வாயினின்று வெளிப்படுவது என்று கருதினார்.

வாய்வு என்ற சொல்லே சரியானது.  ஆனால் தமிழர்களும் வாயு என்பதையே பின்பற்றினர். இதை நோயாகவே பார்க்கலாம்.

சமஸ்கிருதத்தில் இது பொதுப்பொருளில் வழங்குகிறது

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை வழங்கப்படுகிறது.


 

வெள்ளி, 20 ஜூன், 2025

தட்சிணாமூர்த்தி

தட்சிணாமூர்த்தி என்ற பெயரை இன்று ஆய்வு செய்கையில் இரு நன்மைகள் காண்கிறோம். ஒன்று, தட்சிணம் என்பதை உணர்வதுடன்  ; இரண்டு, மூர்த்தி என்னும் அழகான பெயரையும் தெரிந்து மகிழ்கிறோம்.

மூர்த்தி என்ற சொல் பலருக்கும் பெயராகவும் இலங்கும்  பெருமை கொண்டது.  தெய்வப் பெயர்களிலும் இணைந்து வருவது. கிருஷ்ண மூர்த்தி  இராமமூர்த்தி கணேச மூர்த்தி எனவெல்லாம்  காண்க.

வினைச்சொல்: முகிழ்த்தல்.  முகு: பொருள்: முன் சேர்தல். முன் வந்து தெரிவது. மு= முன்; கு = சேர்வுக் குறிப்பு. மு+கு > முக்கு,  பொருள் முன் அல்லது வெளிக்கொணர்தல்.  இழ் என்பது ஒரு விகுதி. பெயரிலும் வினையிலும் இழ் விகுதியாகும்.   இழ் என்பது ஓர் அடிச் சொல்லுமாகும்.  இழ் > இழு, இழை, இழி என்பவற்றில் வெவ்வேறு ஆனால் தொடர்புறு இயக்கங்களைக் குறிக்க வரும். ஆகவே தமிழ் என்றால் தனிமைப் பண்புடன் , சுவையுடன் பொருளுடன்  இயங்கும் மொழி என்று கொள்க.  ஆக, முகிழ் > முகிர் > மூர். + தி (விகுதி ) > மூர்த் தி :  முன்தோன்றும் தெய்வஉரு

தென்கணம் > தெற்கணம் > தெக்கணம் > தக்கணம் >  தட்சிணம். ( எ> அ). எ -  அ: தெரிசனம் - தரிசனம். சொன்முதல் திரிதல்.

தெற்கணம் பார்க்கும் தெய்வம் என்றாயிற்று. தெற்கணம் - தென்திசை.

கண் = இடம்   கணம் இங்கு நிலப் பகுதி.

 அறிக மகிழ்க

மெய்ப்பு பின்

பகிர்ந்துகொள்க 








எது சரி? நெசமா நிஜமா

 இதனை இப்போது ஆய்வு செய்வோம்.

நடைமுறை  வாழக்கையில் நம் மக்கள் பேசும்போது நெசம் என்றுதான் பேசுகிறார்கள். இதை ஆயந்த சிலர் நில் என்ற சொல் கடைகுறைந்து சு அம் என்ற விகுதிகள் ஏற்று நிசம் என்றாகி  நெசம் என்று மாறி வழங்கும் என்றனர்.  இந்தக் கருத்தில் உண்மை இருக்கி றது என்று நினைக்கலாம்..

எழுத்துத் திரிபுகள் என்ற அளவில் இந்த  விளக்கதில் வழு ஒன்றுமில்லை. ஆனால்  இதனினும் சிறந்த கருத்தில் நெசம் என்பதே முதலாகச் சொல் தோன்றியது என்பதே உண்மையாகும்.

ஓர் உண்மையைக் கூறுகையில் கருத்துகள் தம்முள் இணக்கம் பெற்று சொல்வது ஏற்புடைமை அடையும். பொய் எனின் ஒன்றுக் கொன்று பொருந்தாமை வெளிப்படும். Contradictions, inconsistencies என்றிவற்றைக் கூறுவர்

ஆகவே உண்மை  நெசவு போன்ற இழைப் பொருத்தம் உள்ளது. இதனாலே நெசவு என்ற சொல்லினடியாக நெசம் என்பது  தோன்றிற்று. இதுவே சரியானது மேலானது ஆகும்  இருவழிகளில் உரைபெறு சொல் இதுவாம்.   நெசவு என்பதில் நெச என்பது அடிச்சொல் அன்று (அல்ல) எனினும் அடிபோல் பாணினிபோல் பாவித்துக் கொண்டால்,  அதனோடு அம் விகுதி இணைப்பின் அது நெசம்  ஆகிவிடும். இழைப்பொருத்தம் ஆதலின் உண்மைத்தன்மை உடையது என்பதாம். எளிதாகப் புரிந்துகொள்ளும் நோக்கில் சுருக்கினோம்  விரித்துரை வேண்டின் எமக்கு எழுதுங்கள்.  புரிதலுக்காக இஃது அடி என்று உரைக்க.

இணக்கம் கருதி இது இருபிறப்பி அல்லது பல்பிறப்பிச் சொல் என் க .

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்

பகிர்ந்து பரப்புக.


 கூறுவர்