இதனை இப்போது ஆய்வு செய்வோம்.
நடைமுறை வாழக்கையில் நம் மக்கள் பேசும்போது நெசம் என்றுதான் பேசுகிறார்கள். இதை ஆயந்த சிலர் நில் என்ற சொல் கடைகுறைந்து சு அம் என்ற விகுதிகள் ஏற்று நிசம் என்றாகி நெசம் என்று மாறி வழங்கும் என்றனர். இந்தக் கருத்தில் உண்மை இருக்கி றது என்று நினைக்கலாம்..
எழுத்துத் திரிபுகள் என்ற அளவில் இந்த விளக்கதில் வழு ஒன்றுமில்லை. ஆனால் இதனினும் சிறந்த கருத்தில் நெசம் என்பதே முதலாகச் சொல் தோன்றியது என்பதே உண்மையாகும்.
ஓர் உண்மையைக் கூறுகையில் கருத்துகள் தம்முள் இணக்கம் பெற்று சொல்வது ஏற்புடைமை அடையும். பொய் எனின் ஒன்றுக் கொன்று பொருந்தாமை வெளிப்படும். Contradictions, inconsistencies என்றிவற்றைக் கூறுவர்
ஆகவே உண்மை நெசவு போன்ற இழைப் பொருத்தம் உள்ளது. இதனாலே நெசவு என்ற சொல்லினடியாக நெசம் என்பது தோன்றிற்று. இதுவே சரியானது மேலானது ஆகும் இருவழிகளில் உரைபெறு சொல் இதுவாம். நெசவு என்பதில் நெச என்பது அடிச்சொல் அன்று (அல்ல) எனினும் அடிபோல் பாணினிபோல் பாவித்துக் கொண்டால், அதனோடு அம் விகுதி இணைப்பின் அது நெசம் ஆகிவிடும். இழைப்பொருத்தம் ஆதலின் உண்மைத்தன்மை உடையது என்பதாம். எளிதாகப் புரிந்துகொள்ளும் நோக்கில் சுருக்கினோம் விரித்துரை வேண்டின் எமக்கு எழுதுங்கள். புரிதலுக்காக இஃது அடி என்று உரைக்க.
இணக்கம் கருதி இது இருபிறப்பி அல்லது பல்பிறப்பிச் சொல் என் க .
அறிக மகிழ்க.
மெய்ப்பு பின்னர்
பகிர்ந்து பரப்புக.
கூறுவர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக