திங்கள், 16 டிசம்பர், 2024

விலைமகளாக இருந்து மீண்ட பத்தினி வரலாறு. NOT FOR GENERAL READING pl do not read if not invited

will edit later.  Written for my close friends. Will be moved later to another location. 


சில காரணங்களுக்காக,  இந்த இடுகையில் இந்த முன்னாள் விலைமகளின் பெயர் வெளியிடப் படமாட்டாது.  இவளின் மீட்சிக்காகப் பாடுபட்டது என் காலஞ்சென்ற மனைவிதான்.  என் சேமிப்பும் இதிற் பெருவாரியாகச் செலவு ஆகிவிட்டது.  இதைப் பற்றிச் சில வேளைகளில் யாம் எண்ணிப்பார்ப்பதுண்டு. காரணம் எமக்குப் பயனில்லாத முயற்சி இதுவாகிவிட்டதுதான். இவள்பெயரை இங்கு  வீ=லை என்று மட்டும் குறிப்பிடுவோம்.

விலை (விலை மாது) என்பது வீலை என்று மாற்றி இங்குப் பெயராகும்.

பன்னிரண்டு அகவையிலே வயதுக்கு வந்தவுடன் இவள் ஒருவனுடன் வீட்டை விட்டு ஓடிவிட்டாள்.  இரண்டு பிள்ளைகள் பெற்று அந்தப் பிள்ளைகளுக்கு  ஏழு எட்டு வயதானவுடன் தான்  மீண்டும் இவளின் அன்றைய இடம் எங்களுக்குத் தெரியவந்தது. இந்த மனிதன் வேற்று மதத்தவனாக இருந்தமையால் இவளை இவள் குடும்பத்தினர் யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை.

மதம் பார்க்காமல் இவளுக்கு மறுவாழ்வுக்கு இடமளிக்க வேண்டும் என்று யாம்தான்  முடிவு செய்தோம். இவள் புருடனுக்கு நிரந்தர வேலை எதுவும் கிடைக்கவில்லை. அவ்வப்போது ஏதாவது ஊதியம் கிடைக்கும். மற்றபடி எமது பராமரிப்பை இவள் குடும்பம் ஒரு பகுதியாக நம்பி இருந்தது என்பதுதான் உண்மை.

இவள் கூற்றின்படி மத வேறுபாட்டு நிலைமை மாற்றப்பட வேண்டும் என்ற கருத்தை என் மனைவிதான் முன்னெடுத்தார் என்று இவள் சொல்லிக்கொண்டிருந்தாள். அதனால் இந்த வேற்றுமதப் புருடனை விட்டு இவள் இன்னொரு இந்து மதத்தவனைச் சேர்த்துக்கொண்டாள். வேற்றுமத முதல் புருடன் கிளர்ச்சி செய்த காரணத்தால் யாமே தலையிட்டு அவனை வெளியேறும்படி கேட்டுக்கொண்டோம்.  அவனும் மலேசியாவில் பூச்சோங்க் பகுதியில் கடைவைத்துப் பிழைப்பானாகினான்.

இந்தக் குடும்பத்துக்கு யாமளித்துவந்த உதவி போதவில்லை என்பது பின்னர்தான் தெரிந்தது.  இந்த இரண்டாமவன் குடிப்பவன். ஆனால் பளுவண்டி ( லாரி ) ஓட்டினான், அதிலும் வருமானம் கிடைத்தது.

ஆனால் இவள் வீட்டை விட்டு இரண்டாம் முறை  ஓடிய காலத்தில் கொஞ்சக் காலம் விலைமாதாக வேலை பார்த்துப் புருடனைக் காப்பாற்றினாளாம்.  அப்போது ஏற்பட்ட  காவல்துறை நடவடிக்கையில் இவள் நீதி மன்றத்தில் வழக்குக்கு உட்பட்டுத் தண்டனை பெற்று வெளியில் வந்தவள். இவளும் இவளுடைய இரண்டாவது புருடனும்  சில திருட்டு வழக்குகளில் மாட்டிச் சிறைப்பட்டுச் சின்னாபின்னப் பட்டனர்.  என் மனைவி இதில் பேருதவியாக இருந்து இவர்களின் துன்பங்களிலிருந்து இவளை மீட்டெடுத்தார்.

இவர்களின் தொல்லை நீண்ட நாள் தொடர்ந்த காரணத்தால் இவளை வீட்டிற்கு வருவதினின்றும்  குறைக்கவேண்டும்  அல்லது தடுக்கவேண்டும் என்ற முன்மொழிதலை யாம் முன்வைத்தோம்.   அது இவளுக்கும் இவள் இரண்டாவது புருடனுக்கும் பிடிக்கவில்லை.

அதனால் இதுவரை பெற்ற உதவிகளையும் சாப்பிட்ட உணவையும் மறந்துவிட்டு  எம்மீது பல்வேறு  குறைகளையும் கூறிவருகிறாள் இந்த முன்னள் விலைமாது.  

பிராமணனாகப் பிறந்து திரு வி. எஸ் பிள்ளை என்ற தமிழ் வித்துவானால் வளர்க்கப்பட்ட என்னை இவள் குறைத்துக்காட்டி விடலாம் என்று நினைக்கிறாள். இவளைப் பற்றிய வண்டவாளங்கள் அனைத்தும் அறிந்து காவல்துறை அதிகாரியாய் இருந்த என்னை இவள் வென்றுவிடுதல் அத்துணை எளிதன்று. 

இவளை அண்மையில் நடந்த குடும்ப நிகழ்ச்சிகளிலிருந்து  ஒதுக்கி வைத்துள்ளோம். இவள் சொல்வதை யார் கேட்பவர்களானாலும் அதைப்பற்றி யாம் கவலை கொள்ளவில்லை.

இது மீண்டும் செப்பனிட்டு வெளியிடப்படும். இவளின் உண்மைப் பெயர் வெளியிடப் பட மாட்டாது.

தொடர்ந்து எழுதுவோம்.   இது என்ன சண்டை என்று கேட்பவர்கள் தாமே படித்து அறிந்துகொள்ளும்படியாக இது வரையப்படுகிறது. ஏதும் சொல்வதற்கில்லை.


சனி, 14 டிசம்பர், 2024

நண்ணும் நம் தேவி துர்க்கையம்மை

 அம்மைதுர்க்கா  கருணையினால்  அகிலம் தன்னில்

அருள்பெற்றோம் பொருள்பெற்றோம் அனைத்தும் பெற்றோம்

உண்மையினால் அம்மையினை  உயர்த்திப் போற்றின்

உலகிலொன்றை இயலாதென் றகலல் இல்லை.

எம்மவர்க்கோ பிறருக்கோ எதையும் சொல்லா

திருந்தாலும் மனவணக்கம் ஒருவாற்  றாலே

நம்மைவந்து காக்கின்ற அருண்மெய்த் துர்க்கை

நாம்வேண்டும் போதெல்லாம் நண்ணும் தேவே.


கருணை -  இரக்கம்.  இரக்கம் என்பதே பின்  ரக்ஷ என்றும் திரிந்தது. இப்பாடல் மனவணக்கத்தின் பாங்கினை வலியுறுத்துகிறது.  இதைப் பிறருக்கு  வெளிப்படுத்த வேண்டியதில்லை.
ஒருவாற்றாலே  -  ஒரு வழியாலே.  அருள்பெறு மெய்யினால் முன் தோன்றுவதால்  அருண்மெய்  ஆயிற்று.   நண்ணுமின்கள் நல்லறமே  என்ற சிலம்புப் பயன்பாட்டில்  பொருந்துக என்ற பொருளில் இச்சொல் வந்தமை போல் காண்க.
தேவு  -  கடவுள். இது தேவன், தேவி என்பவற்றில் அடிச்சொல்
அகிலம் என்பது ஓர் அழகிய சொல்.  சுட்டடிச் சொற்களின் வழியில் சென்று  இதன் பொருளை உணரவேண்டும்..   அ  அங்கு; கு -  சேர்விடத்து;  இல் = நமக்கு வீடாக ;  அம்  -  அமைந்திருப்பது  என்பதை  சேர்விடத்து அங்கு என்று மாற்றிக் கொள்க.  நீ அகிலத்தை விட்டு அப்பால் போய்விட முடியாது;  எப்படிப் பார்த்தாலும் இறைவன் அமைத்த அவ்விடத்துக்குள் தான் இருப்பாய்..அகிலம் என்பது அழகிய தமிழ்ச்சொல்.

நீ இருக்குமிடம் நீங்கிய எவ்விடமும் இருக்குமிடத்துடன் சேர்ந்திருப்பதே என்பதை கு என்னும் இணைப்புச்சொல் விளக்கும். மேற்கூறியவற்றுடன் இப்பொருளும் இணைய,  அ-கு என்பன உயரிய பொருண்மை தந்தன காண்க. நீ இருக்குமிடமும் ஒன்றானதே அகிலம். இல் என்ற சொல் அது தமிழ்ப்புனைவு என்பதை உறுதிப்படுத்துகிறது.

துர்க்கையம்மன் பல் இனத்தவராலும் இந்தியாவில் வணங்கப்பெறும் தெய்வம்.  துர்க்கை என்ற சொல்லுக்கு அவ்வம்மொழி அறிஞர் பொருள் கூறுவர். ஒரு குழந்தையைப் பாராட்டுவதுபோல் அன்பு காட்டுவதும் பொருள்கூட்டுவதும் விதம் பலவாம்.  ஆனால் தமிழில் உள்ள சிறப்புப்பொருள், எத்தடையையும் துருவிச்சென்று காவல்தரும் அம்மை என்பதாம். இதை நாம் ஏற்றுப் போற்றுவோம்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்.

மெய்ப்பு: 16122024 2112

Pl do not enter compose or edit mode as you might make unwanted changes unintendedly by your mouse movement. Changes are at times autosaved .

வியாழன், 12 டிசம்பர், 2024

பிருந்தாவனம் தமிழ் மூலமாக

 'பிருந்தாவன' என்ற சொல் 'விருந்தாவன' என்றும்  பகரம் - வகரமாகத் திரிபு அடையும்.  வகு (த்தல்)  எனற்பாலது பகு  (த்தல்)  என்றும் வருவதிலிருந்து இதனை நீங்கள் அறியலாம். பகரம் வகரம் ஒன்றுக்கு மற்றது ஈடாகச் சொல்லில் வருவது தமிழுக்கு மட்டும் உரியதன்று.  பலமொழிகளில் பகர வகரத் திரிபுகள் உள்ளன. ஆகவே ஒருமொழியமை   வரைச்சிறப்பு உடைய திரிபு இதுவன்று.  வரை எனின் எல்லை.

பிருந்தாவனமென்பது கண்ணன் விளையாடிய துளசிவனம் என்று நம்பப்படுகிறது. இந்தச்  செய்தியிலிருந்து பிருந்தா என்றால் என்ன பொருளென்று உடன் தெரியவில்லை. மேலும் வட இந்தியாவில் இவ்வனம்  ஒரு மிகப் பெரிய நிலப்பகுதி என்று தெரிகிறது. ஆனால் கண்ணன் பிறந்தது இவ் வனத்திலன்று. ஆதலின் "பிறந்த"  என்ற சொல் திரிந்து  பிருந்தா  என்று  மாறிவிட்டதாகத் தெரியவில்லை. 

இச்சொல் எவ்வாறு அமைந்தது என்பதைத் தீவிரமாக தேடத் தூண்டுகிறது  இந்நிலைமை.

இது பின்வருமாறு ஆய்ந்தால் தமிழாகி விடும்:

பிரிந்த -   ஏனை எல்லா வனங்களிலும் காடுகளிலும் இருந்து தனியாகப் பிரித்து அறியப்பட்ட  ----  என்று பொருள்  ( எபெ).

ஆ -  மாடுகள். ( எபெ) என்று பெயர்

இந்த ஆ என்னும் வகைப்பாட்டில்,  பெண் மாடு மட்டுமின்றி ஆண்மாடுளையும் அடக்கியே பொருள் கொள்ளவேண்டும்.  ஏனென்றால் ஆதவர்> யாதவர் என்ற சொல்லமைவுகள்கூட,  ஆண்மாடுகளையும் உள்ளடக்கியனவே  ஆவது காண்க.  பசுக்களை வளர்க்கும் ஒருவன்,  காளைகளையும் வளர்ப்பதில் தடை  அல்லது இயலாமை எதுவும் இல்லை.

வனம்:   காடு என்ற சொல்,  காத்தல் என்ற சொல்லினின்று தோன்றி,  டு என்ற விகுதி பெற்று, காடு என்னும் இச்சொல் அமைந்து, பல மரஞ்செடிகொடிகள் அடர்ந்து வளர்ந்த நிலப்பகுதியைக் குறித்ததாக ஆசிரியன்மார் சிலர் கருத்துரைப்பர்.

யாம் இதைக் கடுமை என்று பொருள்படும் "கடு"  என்பதிலிருந்து பிறந்ததாகக் கருதுகின்றோம்.  கடு என்பது முதல் நீண்டு கா என்று திரிந்து காடு என்றமைவு கண்டது. காவலும் மென் காவல், வன் காவல் என்று இருவகைப்படும்.  தொடக்கத்தில் கடிய காவல் இருந்த காடுகள், பின்னர் காவலிடும் தன்மையில் மென் காவல் உடையவாகவும் பின் காவலே இல்லாதனவாகவும் மாறியிருக்கலாம்.  இது சூழ்நிலைகள் பலவற்றைக் கொண்டு அமைவதாகும். காவலின் தன்மையும் வேறுபடற்குரித்தாம்.  ஆகவே காடு என்பது கடு என்ற சொல்லினின்று அமைந்தது என்று முடிப்போம்.  

இவ்வாறு முடிபு கொள்ளவே,  வல் > வன்> வனம் என்பதும் கடு என்பதற்கான வன்மை தெரிக்கும் சொல்லே ஆகும். இச்சொல் நாளடைவில், தன் வன்மைத் தன்மைப் பொருள் மறைந்து,  அழகு என்ற பொருளை மருவியிருத்தல் தெளிவு.  பிற்காலத்தில் வனப்பு என்ற சொல் அழகு என்றே பொருள்பட்டது.  நாறு என்ற சொல்  நன்மணம் என்பதிலிருந்து  தீயவீச்சம் எனப்பொருள் கொண்டதுபோல், பல சொற்கள் உள்ளன. இங்கு சொன்னவை போதும்.  உணர்ந்துகொள்க.

வன் என்பது உல் என்ற அடியிலிருந்து வந்தது. உகரம் அகரமாகத் திரியும்.

பின்பு வனப்பு என்பது அலங்காரம் ஆகி, ஓர் இலக்கணக் குறியீடாகவும் ஆகிவிட்டது.

எனவே பிரிந்து ஆ வனம் என்பது, " பிருந்தாவனம்" ---- மற்ற வனங்கள் காடுகள்----- இவைகளினின்று தனியாக விடப்பட்டவை அல்லது பாதுகாக்கப்பட்டவை.  மாடுகள் பல வாழ்ந்தவை.

ஆகவே பிருந்தாவனம் என்பது தமிழ்த் திரிபுச் சொல்.

இதிலுள்ள திரிபு - ரு என்பது ரி என்பதன் திரிபே ஆகும். ஓரெழுத்துத் திரிபு.

பொருள்: பிறவற்றிலிருந்து வேறான ஆக்கள் உள்ள வனம். காளைகள் அவற்றுக்குத் துணை.


மற்றவை பின்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்