இதைத் தமிழ்ப்பேச்சில் வரும் சொல் மூலம் நிறுவுவோம்.
முனிவர்கள் என்போர் இப்பேச்சு வடிவங்களை அறிந்திருக்க மாட்டார்கள். சாமானிய மக்களிட மிருந்து விலகிக் காட்டில் வாழ்ந்து மறைந்தவர்கள் முனிவர்கள்.
நின்று என்பதை மக்களில் ஒரு பகுதியினர் நின்டு அல்லது நிண்டு என்பர். இவ்வாறு திரித்துரைப்பது சம கதம் அல்லது ஒப்பாக ஒலிக்குமுறை. ஒப்பாக ஒலிக்கும் அல்லது சமமாகக் கத்து > கது> கத முறை. கத என்பது கிருத என்று வருமாதலால் சமக் கத> சமஸ்கிருத ஒலி. சமக் கத அல்லது சமஸ் கிருத இன்னோர் ஒலிமுறை.
ஸ் என்பது ஒரு அயல் உடம்படுத்து மெய்.
நிண்டு என்பதை இடைக்குறைத்தால் அது நிடு ஆகும், பின் நிடு+ அது + அம் என்பது நிடதம் ஆகும். நிடு என்பதன் ஈடான நிஷு என்பதனோடு அத் ( அது) சேர்த்தால் நிஷ்த் என்றாகும்.
ஆகவே நிடதம் = நிஷ்த்.
நிஷத் என்பதை - இப்படி ஒலிப்பவர்களிடமிருந்து அறிந்து கொண்டதை - ஈரான் அல்லது உருசியா பக்கத்திலிருந்து வந்தது என்று வெள்ளைக்காரன் கற்பனை செய்து கதைவிட்டான். அதைச் சிலர் அப்போது நம்பி இந்நாள் வரை பிடித்துத் தொங்கிக்கொண்டிருப்பதை அறியலாம்,
ஆதலின் நிண் டு அல்லது நின்டு அது அம் என்பதுதான் நிஷத் என நாம் இன்று சொல்வது என்று அறிந்து இன்புறுக.இந்தச் சம ஒலிகள் இவ்வாறு விளைந்தவையே ஆகும்,
சிறு துளி பெரு வெள்ளம் என்பதை உணர்ந்து, இவ்வாறுதான் திரிபொலி மொழிகள் எழுந்தன என்று உணர்ந்துகொள்க.
சம ஒலி
ஒருபானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதே சிற்றூர் அறிவு. சமஸ்கிருதம் என்பது உள்ளூரில் எழுந்த வேற்றொலி மொழி. அந்த வேற்றொலி என்பது சம ஒலி என்று அறிக. சமஒலி என்பதை இன்னொரு வகையில் சொல்லவேண்டுமானால் சம கதம் என்னலாம். கத்து> கது> கதம். இடைக்குறை + அம் விகுதி. கதம் என்பது கிருதம் என்று திரியும். சம கிருதம்> இரண்டும் இணைத்து சம+ ஸ்+ கிருதம் > சமஸ்கிருதம். சமஸ் என்பதை சம்ஸ் என்று சுருக்கி சம்ஸ்கிருதம் என்பது இன்னொருவகை இணையொலிப்பு ஆகும். இது உள்ளூர் மொழிதான். இதை ஆரியன் கண்டுபிடிக்கவில்லை. ஆரியன் என்றொரு மக்கள்தொகுதி இல்லை. அப்படி இருப்பதாக எடுத்துக்கொள்வது அறியாமை. அது தமிழினோடு சம ஒலியாய் உண்டானது.
கண்ணன், கிருஷ்ணன், சிவன், காளி, இலக்குமி எதுவும் ஈரானிலிருந்தோ அப்பாலிருந்தோ வரவில்லை. அதைக் கூறும் மொழிமட்டும் எப்படி வெளியிலிருந்து வந்தது? சிந்தனைசெய்க. இவற்றை நம்புவதும் நம்பாததும் வேறுவிடையம்.
அறிக மகிழ்க.
மெய்ப்பு பின்னர்.