அர் என்ற அடிச்சொல் நாம் அறிந்தின்புறத்
அர் :> அரத்தி : செவ்வல்லியைக் குறிப்பது.
அர் > அர+ இன் +தம் = அரவிந்தம் : சிவந்த இனிய தாகிய தாமரை. தம் என்பது து+ அம். இன் உடமைப் பொருளெனினும் வெற்று இடைநிலை எனினும்
பெரிய வேறுபாடில்லை.
அர் > அரப்பொடி: சிவப்பாகத் தோன்றும் இரும்புத் தூள். துருப்பிடித்தது சற்று செம்மை தோன்றும்.
அர் > அரன்: இது சிவனைக் குறிக்கும் சொல் ஆகும். சிவ என்பது சிவப்பு நிறம் குறித்தல்போலவே அர் என்பது, அந்நிறமே குறித்தது. சிவ> சிவன்; ஒற்றுமை உணர்க. அரி+அன் என்று புணர்ந்து அரனாகி பாழ்வினைகளை அரித்தெடுப்போன் என்றும் கொளலாகும்.
அர் > அருணன்: இது சூரியனைக் குறிக்கும். அர்+ உண்+ அன் என்று பிரிக்க. உண் என்பதற்கு "உளதாகிய" என்று பொருள்கூறவேண்டும். உண் என்பது துணைவினையாகவும் வழங்கும். எடுத்துக்காட்டு: வெட்டுண்ட. கட்டுண்ட என்பவை. உள் > உண். நாம் உண்பதும் உள்ளிடுதலே ஆகும். விள் > விண் என்பதுபோல. விள்> வெள் > வெளி. சூரியன் செம்மை யாதலின் அர் என்பதில் அமைந்தது. செங்கதிர் என்பது காண்க. (ஆனால் சூரியன் என்னும் சொல் செம்மைப்பொருள் உள்ளதன்று. வெம்மை குறிக்கும் சூடு என்னும் சொல்லினின்று வருவது. சூடு> சூர். சூடியன் > சூரியன்; அதாவது: மடி> மரி என்பது போல. மடிதலே மரித்தல். மடி என்பது ம(த்)தி என்று மலாய்
மொழியில் வரும். இவற்றைப் பின் ஆய்வோம்)
அர் > அரிணி. செந்நிறத்ததான மான்.
அர் > அரிதம் : பொன் நிறம்.
அர் > அரிணம் : பொன். *( செம்மையுடன் உறவுடைய
நிறத்தது )
அருண+ ஆசலம் = அருணாசலம்; அருண+ உதயம் = அருணோதயம். செங்கதி ரோன் தோன்றும் மலை அருணாசலம். இது அருணகிரி அண்ணாமலை என வும் படும்.
அரக்கு என்பது சிவப்பு என்று பொருள்படுவதால், அரக்கர் செம்மை நிறத்தினர் ஆதல் வேண்டுமே, இதை நீங்கள் ஆய்ந்து எனக்கு அறிவியுங்கள்.