Eis என்ற ஐரோப்பிய மூலம், தமிழ் ஐ என்ற சொல்லின் திரிபுதான். படுக்கை வாட்டில் கிடக்கும் நீர், கட்டியாகி உயர்கிறது. உயர்ந்து அடைந்த வடிவத்தில் கரையும் வரை நிற்கிறது. ஐ என்பது தரையினின்று எழுந்த நிலைதான். கட்டியாகிவிட்டால் தண்ணீர் படுக்கைப்பரவலாகி எழும்பாது காய்ந்துவிடும் அல்லது வழிந்துவிடும்.
அங்கு இயைந்து இருக்கும் நீர்க்கட்டியே ஐஸ். சுட்டுச்சொற்களில் ஐ ஆக்கம் பெறும். (அதாவது ஆக்கப் பொருளதாகி வரும்.) ஐ என்பது அ-ய் என்ற சுட்டும் ஒற்றும் உற்ற கலவையாகும்.
ஐ+ இயை + சு > ஐயியைசு> ஐஇசு> ஐசு ஆகும். ஐஸ் என்ற சொல் தமிழில் அமைந்திராவிட்டாலும் மூலங்கள் உள்ளன. கட்டியாகி உயர்ந்து இயைதல் என்ற கருத்து ஐசுடன் ஒப்ப முடிகிறது.
இந்த மூலங்கள் எவ்வாறு அங்கு போயின எனற்பாலதை முன் இடுகைகள் சிலவற்றில் விளக்கியுள்ளோம். வாசித்து மகிழவும்.
அறிக மகிழ்க
மெய்ப்பு பின்