அன்பு என்ற சொல்லைப் பிரித்து இப்போது ஆராய்வோம். அன்பு என்பது இங்கும் இருக்கும், அங்கும் இருக்கும். இல்லாமலும் இருப்பதுண்டு. எனினும் நாம் அன்பு என்றால் அங்கிருந்து உம்மை நோக்கி வருவதைத்தான் சொல்கிறோம். மற்றவர்கள் நம்மிடம் அன்புடன் நடந்துகொள்ளவேண்டும் -- எதிர்பார்க்கிறோம். நமக்கு இசைவானது நடக்கவில்லை என்றால் நாம் சிலவேளைகளில் கத்திவிடுகிறோம். இதற்குக் காரணம், அன்பு நம்மிடம் காட்டப்படவில்லை என்ற எதிர்பார்ப்புதான்!
அ என்பது அங்கு என்று பொருள்படும் சுட்டுச்சொல். அங்கிருந்து வருகிறது என்பதுதோன்ற, அ என்பதை முதலெழுத்தாகப் போட்டுக்கொள்ளுங்கள். இந்த உணர்வு, அவ்விடத்திற்குரியது, அங்கிருந்து முளைத்து உங்களை நோக்கி வருவது, வரவேண்டியது. அ -வுக்கு அடுத்து இன் போட்டுக்கொள்ளுங்கள். இது தோன்றுமிடத்திலிருது வருவது என்று காட்டுகிறது. இன் என்பதில் இங்கு வரவேண்டியது என்பதை இகரம் சுட்டுகிறது. நகர ஒற்று வந்து சேர்தல் குறிக்கும். இப்போது :
அ + இன்.
இப்போது சுட்டுச்சொற்களில் விகுதியில் ஒன்றும் பொருள் இல்லை என்று நீங்கள் நினைக்கலாம். அதிலும் பொருள் காணலாம். காண்பவனுக்குத் தான் பொருள். காணாதவன் எதையும் என்றும் காணமுடியாதவன் தான்.. அங்கிருந்து வந்த மனத்தில் இயக்க அசைவு, என் உள்ளில் வந்து ஒரு தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். அது என் உள்ளில் புகவேண்டும். அந்தச் சொல்லுக்கு ஒரு விகுதி வேண்டுமே. எந்த விகுதி போடுவது என்றால், பு என்னும் விகுதி போடவேண்டும். பு என்பது புகுந்தது என்று குறிப்பால் உணர்த்தும். குறிப்பால் என்றால் என்ன பொருள். அறியாததுபோல் மறைவாகவும் இருக்கவேண்டும். அறிந்துகொள்ளுவதற்கு ஏதுவாக வெளிப்படையாகவும் இருக்கவேண்டும். இவை ஒன்றுக்கொன்ரு எதிரானவை. இரண்டையும் ஏற்ப மட்டுறுத்திப் பொருண்மை அறியவேண்டும். பு என்ற விகுதியைப் போட்டுவிட்டால்:
அ + இன் + பு > அன்பு. என்றாகிவிட்டது.
அன்பு தான் இங்கு வந்து சேர்ந்துவிட்டது, அப்புறம் இ தேவையில்லை. இருப்பிடம் வந்து இணைந்துவிட்டால் அப்புறம் கடப்பிதழ் தேவையில்லாதது போலுமே இது. நீ வந்திருந்தாலும் உன் இருப்பிடம் இதுவே,
அங்கிருந்து இங்கு வந்து புகுந்துவிட்டாய் நெஞ்சிலே
என்று பொருள். இதற்கு பு போடுகிறோம். பூவும் சூடிக்கொள்ளலாம்.
ஆங்கிலச் சொல் லவ் என்பது. ஏன் ஆங்கிலத்தில் உங்கள் அன்பானவரிடம் பேசுகிறீர்கள். எல் என்ற Lக்கு இல்லை என்ற அபசகுனமான பொருளும் இருக்கிறது. ஓவர் என்ற முடிந்துவிட்டதன் குறிப்புக்கும் அது தொடக்கமாய் உள்ளது, OVE (R) ஒவ என்று ஒலித்து முடிவைக்காட்டுகிறது!
அன்பு என்ற தமிழ்ச்சொல்லை இவ்வாறு அமைத்த நம் குகைவாழ் தமிழ் முன்னோரைப் பாராட்டுவோமாக.
அறிக மகிழ்க
மெய்ப்பு பின்னர்