எம்மிடம் இருந்த சங்க இலக்கியத் தமிழ் நூல்கள் அனைத்தும் காணாமற் போய்விட்டன. மலேசியாவில் இருந்து எமது சேமிப்பறைகளிலிருந்து இவை தொலைந்தன. சில சட்ட நூல்கள், மென்பொருள் நூல்கள் மட்டுமே உள்ளன. நாம் உணர்ந்துகொள்ள வேண்டிய தென்னவென்றால், எம்மிடம் அது உள்ளது இது உள்ளது என்று மற்றவர்களுக்குப் பரப்புரை செய்துகொண்டே இருத்தலாகாது. அவர்களுக்கு ஒரு வேகம் வந்துவிட்டால் அவர்களில் யாராவது சதிவேலைகள் செய்து அவை இருந்த இடம் தெரியாமல் செய்துவிடுவார்கள். யார் எப்படிச் செய்தார்கள் என்று கண்டுபிடிக்கும் கட்டமைப்புகள் நம்மிடம் இல்லை. இன்னும் காணாமற் போனவை எவை எவை என்று இங்குக் கூறவில்லை. அதனாற் பயனும் இல்லை.
இவை போன்றவை அழிக்கப் படுவதற்கான " நல்ல" நேரம் ஒரு போர்க்காலம் தான். இப்போது போர்கள் வந்துவிடுமோ என்ற அச்சம் நிலவும் காலமும் இதுவாகும். மகுடமுகி நோய்ப்பரவலும் ( கோவிட்19) ஒரு போர்தான். அது போர் என்று தெரியாமலே உலகம் அதில் உழன்று மேல்வந்துள்ளது.
ஓர் இருநூறு ஆண்டுக்காலத்துக்கு இலங்கையிலிருந்து வெளிவந்த தாளிகைகளின் சேமிப்புகள் கொண்ட தமிழ் நூலகம் அழிக்கப்பட்டது நினைவிருக்கலாம்.
ஆவணங்களையும் பத்திரமாக வைத்திருங்கள்.
மெய்ப்பு பின்னர்.