ஞாயிறு, 21 ஏப்ரல், 2024

The name Ranjan, Ranjani

 ரஞ்சன், ரஞ்சனி என்ற பெயர்கள் பலருக்கு உள்ளன,

நிறைந்தவன் >  நிறைஞ்சவன்.  இங்கு த என்பது ச என்று மாறிவிட்டது.   இது பேச்சுமொழித் திரிபு.

நிறைஞ்சவன் >  நிறைஞ்சன்.> நிரஞ்சன்.  

2ம் சொல்லில் றை - ர ஆனது  முதலாவது ஐகாரக் குறுக்கம், அடுத்து  த- ச திரிபு.  தனி>சனி போல.

நிரஞ்சன் >  ரஞ்சன்.  நிரஞ்சனி > ரஞ்சனி.   ( இது முதற்குறைப்போலி,  நிகரம் கெட்டது ).  ரகரம் முதலாகாது என்ற தொல்காப்பிய முனிவரின் விதியை மீறிய திரிபு.

உதாரணம்:  நிரம்ப >  ரொம்ப.

நீர் அங்கன் > நீரங்கன் > ரங்கன் ( கடவுட் பெயர்).

நீரின் அமிசம் ( அம்சம்) ஆன தேவன்.)

வேறு எழுத்துக்களிலும் வரும்:

உரு ஒட்டி >  உரொட்டி >  ரொட்டி.  ( ஓர் உருவாகச் செய்து சூடேற்றிய இருப்புத் தட்டில் ஒட்டி ஒட்டிச் சமைத்துச் [ சுட்டு ]எடுப்பது ).

ஒரு குழிவுள்ள இரும்புச் சட்டியில்  பிசைந்த மாவை நிறைத்து,  சூட்டில் ஒட்டி எடுப்பது )

நிறை ஒட்டி > நிரொட்டி > ரொட்டி  எனினுமாம்,

ரொட்டி என்பதை  லொத்தி என்பது சீனர்களின் பேச்சுத் திரிபு.  லோ தீ என்று பொருள்கூற அவர்களுக்கு வசதி ஆகிவிடுகிறது.  ல - ர திரிபும் உள்ளது.

மூலச்சொல் திரிந்தால்  றகர வருக்கம் ரகர வருக்கமாகித் தன் வன்மையை இழந்துவிடும்.


அறிக மகிழ்க.

மெய்ப்பு: பின்.


சனி, 20 ஏப்ரல், 2024

சாமியைக் கும்பிடுதல் தமிழர் பண்பாடு

 இங்குச் சில ஆய்வுரைகளை நீங்கள் அடைந்தறியும் பொருட்டு கீழே குறிப்பிடுகிறோம்.  சொடுக்கி வாசித்து அறிக. நீங்களே தாங்களாகவே தேடிக் கண்டுபிடிப்பது கடினம்.  ஆகையால் இது இங்கு பதிவுபெறுகிறது.

1. https://sivamaalaa.blogspot.com/2019/02/blog-post.html

சாமி என்பது எப்படி அமைந்த சொல்.

2. https://sivamaalaa.blogspot.com/2019/12/blog-post_9.html

சாமி  இன்னொரு பொருள்

https://sivamaalaa.blogspot.com/2017/06/go-to-heaven-now.html

சொர்க்கத்தைத் தாக்கிய  அறிவாளிகள் சிலர்

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்


வெள்ளி, 19 ஏப்ரல், 2024

விதிநிரல் : மிரட்டு - விரட்டு

 மிரட்டிய பின்னும் மிரட்டப்பட்ட மனிதன் அஞ்சி ஒடுங்கிய பின்னுமே அந்த மனிதனைத் துரத்திவிட முடிகிறது  

ஆகவே:

மிரட்டு ( மி )  >  விரட்டு.

இவ்வாறு சொற்கள் அவற்றின் தொடர்பொருள் நிரலுடன் தமிழில் அமைந்திருப்பது கண்டு வியக்கத் தகுந்ததாய் உள்ளது.  இதுபோலும் நிகழ்வு நிரலை யாம் ஏனைச் சொற்களிலும் கண்டுள்ளோம்.  ஆங்காங்கு எழுதியும் உள்ளோம்.

இது மிஞ்சு> விஞ்சு என்ற விதிநிரல் படியான  திரிபுவகையாகும், 


அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்.