இது இரு வகையில் வந்திருக்கலாம்.
நில்>நிற்சம்>நிசம் >நிஜம்.
விகுதிகள்: சு + அம்.
எது "நிற்குமோ" அது உண்மை.
உண்மை அல்லாதது நில்லாது.
நிறுவியது உண்மை.
நிறு > நிஜ் > நிஜம்
அறிக மகிழ்க
மெய்ப்பு பின்
By Sivamaalaa : Poems , Commentaries to other literary works. Etymology of selected words சிவமாலாவின் கவிதைகள் கட்டுரைகள் பழஞ்செய்யுட்களுக்கான உரை விளக்கம் சொல்லாய்வுகள் இன்னும் பல WELCOME உங்கள் வருகை நல்வரவாகுக.
இது இரு வகையில் வந்திருக்கலாம்.
நில்>நிற்சம்>நிசம் >நிஜம்.
விகுதிகள்: சு + அம்.
எது "நிற்குமோ" அது உண்மை.
உண்மை அல்லாதது நில்லாது.
நிறுவியது உண்மை.
நிறு > நிஜ் > நிஜம்
அறிக மகிழ்க
மெய்ப்பு பின்
கணவரை இழந்து வாடிக்கொண்டிருக்கும் மனைவி, அக்கணவரின் எரியும் சிதைக்குள் புகுந்து தானு மெரிந்து சாம்பலாவது "தீயாகுதல்". இக்கருத்திலிருந்து:
தீயாகு + அம் > தீயாகம் > தியாகம்.
சொன்முதல் நெடில் குறுகியும் பெயரமையும். பிறவாறும் வரும்.
எ-டு:
சாவு> சவம் ( பிணம்)
தோண்டு+ ஐ > தொண்டை.
வினைச்சொல்: வா - வந்தான். வருக.
எனப் பலவாகும்.
கணவனாகிய அரசன் தோற்று இறந்தபின் அரசி வாழ விரும்பாமையால் இது நிகழும் . பின்னர் இதன் பொருள் விரிந்தது.
தியாகம்> தியாகி.
அறிக மகிழ்க.
மெய்ப்பு பின்
இனி மாமூல் என்ற சொல்லைக் காண்போம்.
இஃது ஒரு பேச்சு வழக்குப் புனைவுச் சொல் ஆகும். (பகவொட்டு )
மா - மாறுபடாத,
மூல் - மூலத்தொகை. (முன் தீர்மானித்தது)
இது பின் பிற அண்டை மொழிகட்கும் பரவிற்று. இஃது உருது என்பது ஓர் ஏய்ப்புரை.
( எமன்: இதையும் அறிவோம்)
எம்மிலிருந்தே எம்மைக் கொல்வது, ஒரு தேவனாக உருவகிக்கப்பட்டது).
எம் + அன்
அன் -அணிமை, அணுக்கம் குறிக்கும்
அன்பு - மனத்தின் அணுக்கம் ( அன்+பு)
அன், அண் பொருள் ஒன்றே.
அறிக மகிழ்க.
மெய்ப்பு பின்னர்.