திங்கள், 27 நவம்பர், 2023

லதா தமிழ்

 இலையைத் தருவது கொடி.

இலை  >  ல.

தரு(வது)  >   தா.

ல+ தா >  லதா.  என்றால்  இலையைத் தரும் கொடி.

தமிழ் மூலம் மெய்ப்பிக்கப்பட்டது.

பேச்சு :

இலை -  எல - ல (என்று பலுக்குவர்.)

தரு  -  வினைப்பகுதி.  தா  என்பது ஏவல்வினை

பலுக்குதல் - உச்சரித்தல்.


அறிக மகிழ்க

மெய்ப்பு:  பின்.

கணபதியை வணங்கி வரப் பொறுத்தருள்க

ஐஞ்சீர் விருத்தம்





இந்தப் படத்தில் அம்மன் இயல்பாக உள்ளார்



 நீயே  பணிந்தேன்  சிரித்தாய் இன்றேன் கவலைமுகம்,

தாயே எளியேன் எதுவும் செய்தேன் ஏலாததோ

வாயே  திறக்கத் துணிவே இல்லேன் நாலுதிசை

ஆயும்  கணங்கள்  பதிகால் வீழ்வேன்  பின்சரணே.


பணிந்தேன்,  நீ சிரித்தாய் ---  முன்னர் பணிந்தக்கால் நீ சிரித்தாய்.

இன்றேன்  கவலைமுகம்  -  இன்றைக்கு ஏன் கவலை தோய்ந்த முகத்துடன்

இருக்கின்றாய்;

வாயே  -  உன்னை வாழ்த்துவதற்கு வாய்.

திறக்கத் துணிவே இல்லேன் -   பயன்படுத்தவும் துணிச்சல் இல்லாதவன் ஆனேன்;

நாலுதிசை ஆயும் கணங்கள் பதி -  நான் கு திசையும் ஆட்சிசெய்யும் கணங்களின் அதிபதி,  

கால் வீழ்வேன் -  அடிகளைப் பணிவேன்,  

பின் சரணே -  பின் தாயாகிய உன்னிடம் சரண் புகுவேன்


இது துர்க்கை அம்மனை நோக்கிப் பாடிய பாட்டு.



சனி, 25 நவம்பர், 2023

At Durgai Amman Temple Singapore

 After worshipping Sri Sivan,  devotees worship Sri Durga for spiritual peace and grace.








எமையாளும் இறைவிநீ  துர்க்கை யம்மா

என்றும்நீ  துணைசெய்வாய் எம்மில் நின்றே

சுமையாக வருந்துன்பம் சுருண்டு வீழச்

சோர்வகற்றிக் கூரறிவு சூழத்  தந்தாய்!


--- சிவமாலா