இந்தியத் திருவென்னும் பெருநாட்டிற்குச்
செந்தண்மை வாய்ந்தஒரு தலைவரென்றால்
வந்துள்ள உயர்துறவி ஒருவர்மோடி.
தமக்கென்று பொருள்வேண்டா அவரேநல்லார்
பிறர்க்கென்றே என்பினையும் ஈவரன்னார்
உலகுக்கும் அமைதிக்கும் ஒருவர்மோடி.
பொருட்பாயைச் சுருட்டிக்கொண் டலைகயமைசேர்
திருட்டாமை திரிந்தூரும் குருட்டுக்காட்டில்
அருட்டிருவாய் அணிபெறுவார் ஒருவர்மோடி.
இவை தாழிசைகள். ஒருவர்மோடி என்ற தொடர் மூன்றடுக்கி வந்தன.
என்பு - எலும்பு
ஈவர் - தருமம் செய்வார்
அலை - அலைகின்ற
கயமை - நற்குணமில்லார்
திருட்டாமை - திருட்டு ஆமை
திரிந்தூரும் - ஓரிடமென்று இல்லாமல் எங்கும் மறைவாகச் செல்லும்
திரிதல் - திரிபுகொள்ளுதல்
அருட்டிரு - அருள் திரு
அணி பெறுவார் - அழகினை அடைவார
தனக்கென்று (ஒருமை) - தமக்கென்று ( பன்மை)
தனக்கு ( தமக்கு), பிறர்க்கு, உலகுக்கு என்பன முரண் எதுகைகள்.