ஞாயிறு, 9 ஜூலை, 2023

உயிரா ஜீவனா பிறப்பா?

 இதை இழுத்துவிரிக்காமல் சுருக்கமாகச் சொல்லிவிடுவோம்.

உயிர் என்பது முழுச்சொல்.

யிர் என்பது தலையெழுத்து நீங்கியது. இதனை முதற்குறை என்பர்.

யிகரத்தில் சொற்கள் தொடங்காமையின், மாற்றாக  இர் என்பதை இடுவோம்.  -யிர் என்பது உண்மையில் இர் தான்.  உ =  உள்ளே ;  இர் -  இருப்பது.  இர் என்பது இரு என்பதன் மூலம்.   யாரும் உள்ளே எந்தத் தொங்கலில் உயிர் உள்ளது என்று கண்டுபிடித்துவிட்டதாகத் தகவல் எம்மிடம் இல்லை. உங்களிடம் இருப்பின் எம்முடன் பகிர்ந்துகொள்ளுதலை வரவேற்கிறோம்.

உய்  ( உய்தல்) என்பதை முதலாகக் கொள்வர் சிலர்.  ஆனால் உய் என்பதும் உகரச் சுட்டடிச் சொல்லே ஆதலால்  வேறுபாடு ஒன்றுமில்லை.

இர் என்பதன் பொருண்மையை இரை என்பதிலும் கண்டுகொள்ளலாம்


இழிவறிந்து உண்பான்கண் இன்பம்போல் நிற்கும்
கழிபேர் இரையான்கண் நோய் (குறள் 946)

இரை என்பது விலங்குணவு பறவை உணவு முதலியன குறிக்கும். கழிபேருணவினனை இங்குக் கழிபேரிரையான் என்று ஏனை உயிரினங்கள் உண்பனபோல் உண்பவன் என்ற பொருள்பட நாயனார் உரைப்பது சிறப்பு.

 இர் - இங்கிருந்து,  அ - அங்குவரை ,  அய் =  அகல இருப்பது. ஐ என்பதும் அது.  அகல அறிவும்  அகல ஆளுமையும் உடைய மனிதரைக் குறிக்க "ஐ" அடிச்சொல்லாய் வரும்.  " ஐயர் யாத்தனர் கரணம் என்ப"  என்ற தொல்காப்பிய நூற்பாவில் ( கற்பியல்  4 )  இச்சொல்லுக்கு இதுவே பொருள்.  இர் அ அய் > இரை,  ( கோழிக்கு இரை முதலிய உணவுகள் ),  இரைத்தல் -  வினைச்சொல்.  இ, அ, அ(ய்) -  இவை சுட்டடிகள். இடையில் அகரமின்றியும் உரைக்கலாம். இடையில் அகரம் புணர்த்திக் கெடுத்தல் பொருளுணர்வுக்கு முழுமை தரும்.

இர் என்பது  சிர் என்று திரியும். யிர் என்பது புணர்ச்சித் திரிபு,  யகர உடம்படு மெய் வந்துள்ளது, 

இதை  அமண் - சமண் என்ற திரிபில் அடக்கிவிடலாம்.  அகரமும் அதன் வருக்கங்களும்  சகரமும் அதன் வருக்கங்களாகத் திரியும்.  இங்கு எல்லாவற்றையும் காட்ட இடமில்லை.  பழைய இடுகைகளில் படித்துப் பட்டியல் மேற்கொள்க.

சிர் என்பது அதற்கு இனமான முதலுடன் ஜிர் என்றும் பின் ஜிவ் என்றும் திரியும்.

ஜிவ்  -- ஜிவ் + அன் >  ஜீவன்   முதனிலை நீண்டு தமிழுக்குரிய அன் விகுதியும் பெற்று  ஜீவன் ஆனது.  தமிழில் இது ஆண்பால் விகுதி.  வேறு மொழிகள் அவற்றை வெற்று விகுதிகளாக்கிக்கொள்ளத் தடை எதுவும் இல்லை.

தமிழிலே கூட இவ்வாறு அன் பொது விகுதியாக வரும்,

உயர்திணை நீங்கிய பிற அணியினவாய உயிர்கள் பிற அணிகள் அல்லது பிரா(அ)ணிகள் >  பிராணிகள்.  அகரம் தொகுந்தது. பிராணியை இயக்குவது அதன் பிராணன்,  இங்கும் அன் விகுதி வந்து அழகு செய்யும். கக்குவான் என்பது நோய்ப்பெயர்,  அதில் ஏன்  ஆன் விகுதி?

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்

வெள்ளி, 30 ஜூன், 2023

ஊர், ஊர்ந்து ஊர்ந்து பெரிதாகுவது ---மற்ற பொருண்மைகள்

 ஊர் என்பது ஊர்ந்து ஊர்ந்து பெரிதாவதான குடியிருப்பிடம் என்று விளக்கப்பட்டிருப்பினும்,  ஊர்த்துதல்  ( verb) என்றும் ஒரு வினைச்சொல் உள்ளது. ஆகவே ஊர் என்ற வினைப்பகுதியை ஆய்கின்ற பொழுது இதை ஏன் ஊர் என்ற பெயர்ச்சொல்லின் தொடர்பில் விளக்கவில்லை என்ற கேள்வி எழுவது இயல்பு ஆகும்.

ஊர் என்ற சொல்,  நாகூர்,  இந்தூர், போரோபுதூர், ஜொகூர் என்று பன்மொழிச் சொற்களிலும் காணப்படுகிறபடியால்  தமிழின் தாக்கம் எல்லை தாண்டி எங்கும் காணப்படுவதொன்று என்று அறியலாகும்.  ஊர் என்பது இடப்பெயர் ஆதலினால்,  அங்கோர் வாட் என்ற சொற்றொடரில்   அங்கோர் என்பது உண்மையில் ஊர் என்பதேயாகும் என்பதும் ஊகித்தற்குரியது ஆகும்.அங்கூர் > அங்கோர்   (  அங்கு  ஊர் )

.புரி என்ற சொல்லும் இவ்வாறே  பெருநகர் குறிக்கும் புரி என்பதே.   (  நாகபுரி >  நாக்புர்  )

ஊர்த்தல் என்பதற்கு  ஊற்றுதல் என்ற பொருள் உள்ளது.

ஊர்கள் பெரும்பாலும் கொஞ்சம் மேடான பகுதிகளில்தாம் அமைக்கப்பட்டு வந்தன என்பது அறியலாம்.  இவ்வாறு நடந்தால்தான் மழைநீர்  வடிந்து ஊருக்குள் வெள்ளப்பெருக்கு இல்லாமல் இருக்கும் என்பது அறிக, இதற்கேற்ப,  ஊர்த்துவம் என்பது  மேல்  என்று பொருள்பட்டு,  மேட்டுப்பகுதியைக் குறிக்கின்றது. ஊர்த்தம் என்பதும் அது.

கால்கள் மேலெழுந்தவாறு செய்யப்படும் பத்மாசனம்,  ஊர்த்துவ பதமாசனம் எனப்படுவதும் காண்க,, உடல் தலைகீழாக மேலெழுவதனால்,  உடல்நீர்வகைகள் ஊற்றும் பாங்கில் இருக்கும்,

ஊர்த்துவம் என்பது தமிழ் மூலங்களால் ஆன சொல்.

பிற பின்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்

This post is corrupted with dots.  To edit.  30062023

புதன், 28 ஜூன், 2023

உரூபன் சாருகா திருமண வாழ்த்து

 இன்று நம் வாசகர்கள்  உரூபனும் சாருகா  இருவரும் சிங்கப்பூர் மாரியம்மன் கோவிலில் திருமணம் செய்துகொண்டனர்.  இவர்களுக்கு நாம் நம் வாழ்த்துப்பாட்டினை வழங்குகின்றோம்.



 


பாரினில் பன்னெடுங் காலம்  பைந்தமிழ்

வாரியில் உருபன்  சாருகை இ ருவரும்

ஓரிணை யாகவே சீருற  நீந்தியே

யாரும்  அறிந்திடா இன்புடன் வாழ்கவே.


பேறெனப்  படும்பதி   னாறும்  பெறுகமுன்

ஏறியுச்  சிம்மலைச்  செல்வம்  அடைகநல்

ஆறு  மாறிடா  அன்பு     வழியினில்

நூறும் வெல்லுக  நுண்மதி   ஓங்குக.


சிவமாலா கவி.

பொருள்:

பார் = உலகம்

வாரி  -  கடல்

ஓரிணை -  சோடியாக

இன்புடன் -  இன்பமுடன்

பேறு =  செல்வங்கள்

ஏறியுச்   சிம் மலை---  ஏறி உச்சி மலை

நீட்டம் வேண்டின் ஓரெழுத்துத் தோன்றியது: ம்.

ஆறு -  செல்லும் வழி

நூறு   மதிப்பெண்கள்