செவ்வாய், 27 ஜூன், 2023

திருமணத்து முன் : அண்ணனுக்குத் தங்கை செய்யும் அலங்காரம் -

 
















மணத்திற்கு முந்திய மகிழ்வான நாள்,
மனத்து வாஞ்சை மாறா மணியன்ன தங்கை,
மணமகன்  கைகளில் செய் அலங்காரம்
மயில்தோகைப்  புள்ளிபோல் மாகவின் விளைத்ததே

அன்பு வாழ்க.





சனி, 24 ஜூன், 2023

நித்தத்துவம்.

 நித்தத்துவம் என்ற கடினமானதாகத் தோன்றும் சொல் காண்போம்.

நில் >  (இது கடைக்குறைந்து ) :  நி,

தன் து  ( தனது) >  த + து >  தத்து .

இரண்டையும் சேர்க்க  நித்தத்து என்று வரும்.

அம்  -  அமைதல் என்பதன் முனைப்பகுதி.    இங்கு விகுதியாய் வருகிறது.

நி + த +து + அம் >  நித்தத்துவம்.

என்றுமுள்ளது,  மாறாதது.

தன்மை என்ற சொல்லை ஒட்டிப் படைக்கப்பட்ட சொல்தான் தத்துவம்.  அம் விகுதி பெற்றுள்ளது.

தன் > தனம் ( தன் + அம்) >[  தன்னைத் தான் சார்ந்து எழுவது தனம்  ( தனதாய் நிற்கும் பண்பு) அல்லது தத்துவம் ]  எ-டு:  கோமாளித்தனம்.

தன் பொருட்கள் என்று வரும் தனம்  (தன்னவை)  என்பது வேறு சொல்.  தன்னுடன் அமைந்த பொருட்கள்.

தன் -  த  , கடைக்குறை.

து  என்பது அஃறிணை ஒன்றன்பால்,  விகுதி.   உடைமையும் குறிக்கும்.

மலைக்கும் அழகமர்ந்து  சொல் அமைந்தது.

இது ஒரு புனைவுச்சொல்.

மனிதன் தன்மகிழ்ச்சிக்கு  வேண்டிய சொற்களைப் படைத்துக்கொள்வது இயல்பு.. எக்கலைச் சார்பிலும் வரும்.  ஒரே அடியிலிருந்து எழுந்தபோதும்  வழக்கில் வெவ்வேறு பொருளைப் பெறுவன பல.  

அடிச்சொற்களும் விகுதிகள்  மற்றும் இடைநிலைகளும் விடுபடாமல் சொல் புனையப்படவேண்டுமாயின்  தன்றுவம் என்றுவரும்.  இதன் ஒலிப்பைப் பாராட்ட இயல்வில்லை.  நாம் தத்துவம் என்ற சொல்லுடன் பழகிவிட்டதனால் இப்படி உணர்கிறோம் எனல் உண்மையாகலாம். ஆனால் திட்டமாகச் சொல்லஇயலவில்லை.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்







துவம்சம் என்ற இருசொல் ஒட்டு

 துவம்சம் என்பது அறிவோம்.

துவைத்தல்  -  துணி துவைத்தல்..

ஒரு மற்போரில்,  இவன் எதிரியைத் துவைத்து எடுத்துவிட்டான் என்று பேசுவதைக் கேட்டிருப்போம்.  இது ஓர் அணியியற் பாணியிலான பேச்சு ஆகும்.

இதில் இரண்டு மூலங்கள் உள்ளன.  துவைத்தல்,   அம்சம்.

துவை + அம்சம் >  துவை + அம் - சம் > துவம்- சம்>  துவம்சம்.

அமை+ சு+ அம் = அமைச்சம் > அமைசம் >  அம்சம்.

[அமிழ்த்து + சு + அம் >  அமி+ சு+ அம் > அமிசம் > அம்சம்  என்பதுமாம்.   துவைத்து அமிழ்த்தல் என்பது பொருட்சிறப்புடையது எனினும்,  பல எழுத்துக்கள் வெட்டுண்டன.  எனினும் ஆகும்.]  தகரம் சகரமாதலும் கூடும்.

ஏற்கெனவே உள்ள அம்+ சம் என்ற இடைவெட்டுச் சொல், இதில் பின்னிணைப்பாக உள்ளது.

அமைச்சம் என்பது அமைந்தது என்று பொருள்படுவது.  இது ஒழிந்த வடிவம் ஆகும். வெட்டுப்பட்டு  அதன்பின் சொல் ஒழிந்தது.

மொழி என்பது பலர் வாய் பட்டுக் கைபட்டு  உயிர்த்து வந்த நிலையில் நாம் அதனுடன் அணுக்கமாகி உள்ளோம்.  எல்லா வகையான திரிபுகளும் இல்லாவிட்டால் மொழி இல்லை.

பல்வேறு திரிபுகளும் இல்லாத மொழி, கற்பனையில் தான் உள்ளது.