வெள்ளி, 19 மே, 2023

குழந்தை மகிழ்ச்சி.

 எதைக் கண்டு சிரிக்கிறது



படம் அனுப்பியவர்:  திருமதி  ஓ.  ரோஷினி


கண்ணில் தோன்றும் காட்சி யாவும்

கருத்தைக் கவர்ந்த மகிழ்ச்சியே;

விண்ணில் இல்லை வீட்டின் உள்ளில்

விரியும்  சுருங்கும்  பொம்மையே.


எண்ணிப் பார்க்கும் எல்லாம் வந்தே

எனறன் முன்னில்  ஆடினால்

கண்ணில் ஊறும்  இன்பக் கண்ணீர்

கருத்தில் காணொளி  ஆனதே!





தைவானில் சுற்றுலா கிரண்குமார்

 தைவானில்  சுற்றுலவும் கிரண்குமார்

தாய்போலும்  ஊண்பகிரும் பெண்டிர்தரும்

மெய்யன்பு   பெற்றயிலும் உண்டியுடன்

மென்னகையே புரிந்தபடி தோன்றுகிறார்

உய்யவழி  உலகனைத்தும்  வலம்கொள்வீர்

ஓரினமே  யாவருமே எனக்கொள்வீர்

ஐய இந்த உலகினியே சுருங்கிவிடும்

ஆனவுற  வெங்கணுமே  விரிந்துவிடும்!


ஊண் -  உணவு

அயிலும் -  உண்ணும்

மென்னகை -  புன்னகை

உய்யவழி -  முன்னேறவழி

எங்கணுமே -  எங்குமே

விரிந்துவிடும் -  விரிவாகிவிடும்




மழைத்துளி ஆசிரியப்பா

 ஆசிரியப்பா


வாழ்கென வரமருள் குளிர்ந்த மழைத்துளி, 

வீழ்கென ம(ன்)னமகிழ் ஆழ்மனம்  வாழ்கநீ!

உடலில் வீழ்கென ஓடிமுன்  நிற்க,

படலும் குன்றியப்  பெயலும் நின்றது;

வானம்  நீயே வரையாது  வழங்குவை

கானம்  இசைத்தனை கடுந்தரை மோதலில்;

ஏன் நின்  றனைநீ   ஏற்றிடு  நீயே

நான்முயல்  வேனே நனிஇன்   னொருநாள்

கூன்படு நோக்கு குறைத்தே

நnன்மகிழ்ந்திடவே  நனைத்திடு  கவினே.



பொருள்:

வாழ்கென -   வாழ்க என்று

வீழ்கென -  பெய்க என்றவாறு

மனமகிழ் -  மன்ன மகிழ் ( தொகுத்தல்) -ன்  குன்றியது.

---  பொருந்தும்படி மகிழும்.

வாழ்க நீ -  மனமே நீ வாழ்க

படல்  -  உடலை மழைத்துளி தொடுதல்.

வரையாது -   குறைவின்றி

மழைத்துளி கானம் இசைத்தனை - தரையில் வீழ்தலில் ஓர் இசை

வந்த என்பது

மழையில் நனைவதும் ஒரு மகிழ்வு தரும்!

ஏற்றிடு நீயே -  ஏற்றுக்கொள்வய்  நீ

கானம் --- இசை

கூன்படு நோக்கு -  நேர்மையற்ற பார்வை அல்லது நடப்பு

நனி -  நன்றாக

நனைத்திடு -  என்மேல் பெய்திடு

கவினே -   அழகே.  இது மழையை விளித்தது

 மெய்ப்பு  -  பின்னர்: