இன்று கள்ளப்பிறர் என்று நாம் கொடுத்துள்ள சொல்லையும் களப்பிரர் என்ற சொல்லையும் ஒப்பிடுவதுடன் தொடர்புடைய கருத்துகளில் சிந்தனையைச் செலுத்துவோம்.
களப்பிரர் அல்லது களப்பிறர் என்பது பொருளில் ஒன்றே ஆகும் என்பதை உணர்ந்துகொள்ளவேண்டும். எப்படி என்பதைச் சிறிது விளக்குவோம்.
ஒரு பொருளினின்று இன்னொன்று பிரிகின்றது. பிரிகின்றது என்றால் வேறாகிறது.
பிற என்பதும் இதுவே ஆகும். ஒன்றிலிருந்து ( எடுத்துக்காட்டு: பெண் பூனையிலிருந்து ) குட்டி பிறக்கின்றது. பிறக்கிறது என்றாலும், பிரிகிறது - பிறந்தது என்றாலும் கருத்து ஒன்றுதான். காலவேறுபாட்டை ( நிகழ் மற்றும் இறந்த காலங்களைக்) கருதவேண்டியதில்லை .
அது பில் > பிரு ( பிர்) > பிரி. வினைச்சொல்: பிரிதல்.
பிரு என்பதிலிருந்து வரும் சொல்: பிருட்டபாகம், பிரிவுடைய உடற்பாகம்.
பில் > பிறு > பிற - பிறத்தல்.
மொழிமரபு போற்றும் நாம், பிறர் என்பதைத் தனிச்சொல்லாய் எழுதினாலும், களம் என்ற சொல்லுடன் வரும்போது அதைப் பிரர் என்றே எழுதுகிறோம். மொழிமரபின் காரணத்தினால் களப்பிறர் என்று எழுதுவதில்லையே தவிர, புரிந்துகொள்ள அதைப் பிறர் என்று இணைத்துசொன்னாலும் அதுவே ஆகும்.
களப்பிரர் என்ற சொல்லில் முன் உள்ள சொல் களம் என்பதாகும். கள் (என்ற விகுதி) - களம் உண்மையில் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் உள்ள இடம். அது போர்க்களமாக இருக்கலாம், வேலையிடமாக இருக்கலாம். பன்மை மாந்தர் கூடி நிற்றல் எனல் குறிப்பாம். வழக்கில் அது பலர் ஆழ்ந்து செயலாற்றும் இடம் என்றாகிறது.
கள் > கள்ளர் - பலராகச் சென்று பொருள் எடுத்துக்கொள்ளுதலையே அது குறித்தது. எ-டு: ஆநிரை கொள்ளுதல். போரைத் தொடங்குமுன் செய்யும் முதற்செயல்.
கள் > களம். பலர் செயலாற்றும் இடம்.
களம் > களவர் > கள்வர். இச்சொல்லில் மூலச்சொல்லே (கள்) வந்தது.
பிர் > பிரி> பிரிவு.
பிர் > பிரர். பொருள்: படைப்பிரிவினர் என்பது ஆகும்.
பிரி > பிரி+ அர் > பிரர், இகரம் கெட்டு அர் விகுதி ஏற்றது என்று முடிக்கவேண்டும்.
இதை இன்னொரு வகையில் காட்டலாம்:
பிறர் - மூலப் படையிலிருந்து பிரிந்து செயல்படுவோர். பிரர் என்பதுமது.
கள்ளப்பிறர் > களப்பிறர் > களப்பிரர்.
பொருளாலும் ஒன்றே என்பது உணர்த்தப்பட்டது.
கல் > கலத்தல் என்பதும் பன்மை காட்டும். கல் > கள் என்னும் வடிவங்களில், கலி> கலித்தல் என்பன பன்மையர் என்று பொருள்படுதலும் கொள்க. கலி - கலியரசன். ( களப்பிர அரசன், களப்பரன் எனினுமாம்.) எ-டு: இதழ் - அதழ், திரிபு,
அறிக மகிழ்க.
மெய்ப்பு: பின்னர்.