பிறமதத்தான் பின்சென்ற பெண்திசை மாற்றி
பிறமதம் - நீங்கள் சாராத வேறுமதம்.
By Sivamaalaa : Poems , Commentaries to other literary works. Etymology of selected words சிவமாலாவின் கவிதைகள் கட்டுரைகள் பழஞ்செய்யுட்களுக்கான உரை விளக்கம் சொல்லாய்வுகள் இன்னும் பல WELCOME உங்கள் வருகை நல்வரவாகுக.
இன்று புண்டரீகம் என்ற சொல்லை அறிந்து கொள்வோம். இந்தச் சொல், புண்டரிகம் என்று எழுதப்படும்.
தமிழர் கலைநெறியிலும் ( culture ) இந்திய துணைக்கண்டத்தின் ஏனை வாழ்நெறிகளிலும் தாமரை, அல்லி முதலிய நீர்நிலை மலர்களுக்கு விழவுகொள் உயர்நிலை தெளிவாகக் காணப்படுகின்றது.
தாமரையால் வரும் கவர்ச்சியில் அது புட்களை ஈர்த்துக்கொள்வது அறிந்துணரற் பாலது, இம்மலர் சிறிய வகைப் பறவைகளால் பெரிதும் விரும்பப்படுவதாம். அதனால் இது புண்டரிகம் என்னும் பெயர் பெற்றது. எவ்வாறு என்று பார்ப்போம்.
புள் என்பது பறவைக்கு இன்னொரு பெயர்.
"புள்- அது அருகில் ஈர்க்கும் மலர். " இது சொல்லாக்கக் கருத்து.
புள் அ(து) அரு ஈர்க்கு அம்,
புள் து அரு ஈர்க்கு அம்
புண்டரீ (ர்) கு அம்
புண்டரீகம் என்று ஒருசொல்லாய் அமைந்தவாறு காண்க. அம் என்பது விகுதி. இங்கு > இகு ( இடைக்குறை) > இகு அம் > இகம். பொருள்: இங்கு அமைவது. ஈ = இ, இரண்டும் ஒன்றுதான். சுட்டடிகள். ஈ என்பதே குறுகி இ என்றானது.
இன்னொரு பொருளும் இச்சொல் தரவல்லது. அப்பொருள் தொழுநோய் என்பது.
புண் து அரு ஈ கு அம்,
ஈ என்பது இ என்ற சுட்டெனினும், ஈ > ஈவது அல்லது தருவது எனற் பொருட்டு எனினும் ஒக்கும்,
பல புண்கள் உடலிடத்துத் தோன்றுமாறு ஏற்படும் நோய் தொழுநோய் ஆகும்,
இங்கு அரு(கில்) என்பதற்கு அடுத்து உடலில் அல்லது அடுத்தடுத்து உடலில் என்று பொருள்கொள்ளவேண்டும்.
புண் தரு ஈ கு அம் என்றும் கோடல் ஒக்கும். தரு என்பதும் ஈ என்பதும் ஒருபொருளனவாய் இங்குக் கொள்ளுதல் ஏலாமையின், ஈ என்பது இ ( இங்கு) என்க.
அறிக மகிழ்க.
மெய்ப்பு பின்னர்
படத்தில்: திருமதி வனஜா இளந்தலைமுறை மகளிருடன்.