ஒரு நாள் கோயிற் பூசையின் போது இலவசமாக வசதிகுறைந்த சிலருக்கு வழங்குவதற்காக வென்று அம்மன் அருகில் இருந்த மேசையில் வைத்திருந்த சேலைகள் சில காணாமற் போய்விட்டன . தேடிக் கிடைக்காததால் கொஞ்சம் காசுபோட்டு அதை ஏற்பாட்டாளர்களான யாமே வாங்கிக் கொடுக்க வேண்டிய தாயிற்று. கொஞ்சநேரம் கழித்து இடைவேளைபோல் கிடைத்தபோது, தலைமை தாங்கிய ஐயர் வந்தார். "திரைக்கவி பாடிய : "திருடராய்ப் பார்த்துத் திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது" என்ற வரிகளை வாய்மொழிந்து , என்ன செய்யமுடியும் என்ற ஏக்கத்தை முன்மொழிந்தார். யாமும் காசு எப்படி யெல்லாம் நம்மை விட்டு ஓடிப்போகிறது என்று கவன்றவா றிருந்தோம். தவறாமற் கண்டுபிடித்துச் சொல்லும் திறந்தெரி சோதிடர்கள் அருகிலே இருத்தப் பட்டிருந்தால், ஒருவேளை இத்திருட்டு தவிர்க்கப்பட்டிருக்கலாம்.
"கூடுவிட்டு ஆவிதான் போனபின்னே யாரே அனுபவிப்பார், பாவிகாள் அந்தப் பணம்" என்று ஒளவைப் பாட்டி சொன்னதைக் கேட்டு, இலக்கிய நயம் தோய்ந்த யாரும், இன்னொரு முறை அந்தச் சேலைகளை வாங்கிக் கொடுக்காமலிருக்க, இயல்வதில்லை. கோவிட் என்னும் இந்தத் தொற்றுவளர் காலக்கட்டத்தில், பலர் வேலையில்லாமல் இருக்கிறார்கள். ஆகவே திருட்டுகள் மிகுவது இயல்பு என்னலாம். வேலையில்லாமற் போய் வீட்டிலிருந்துகொண்டு காய்ந்த உரொட்டியுடன் காலை உணவை முடித்துக்கொள்ளும் இரங்கத்தக்கோர், இதைச் செய்துவிட்டனர் என்று நினைப்பதை விட்டு, கண்டிக்கப்படாமல் வளர்க்கபட்டு, பழக்கத்திருட்டில் ஈடுபடும் அறத்திறம் வேர்க்கொள்ளாத மாக்களில் ஒருவர் இதனைத் செய்திருக்கவேண்டும், என்பதே சரியாக இருக்கும்.
மருந்தகத்தில் மாத்திரைகள் புதியன வந்தவுடன் அவற்றைக் கேட்பவர்க்கு விற்காமல், இதை எவ்வாளவு நாளாக உண்கிறாய், நன்மை ஏதும் கண்டாயா என்று கேட்டுத் தடுமாற விட்டு, காலக்கடப்பினால் அவை அப்புறப்படுத்தப் பட்ட பின்னர் எறியப்படுங்காலை மறைமுகச் சந்தையில் யாரும் வெளிக்காணாத தருணத்தில் விட்டெறியும் விலையில் விற்றுக்கொஞ்சம் கிட்டுமானால், அதனாற் பிழைப்பவர்களும் உலகில் இல்லை என்று கூறிவிடமுடியாது. பிழைப்பு என்பதும் பலதிறப்பட்டது. பிழைபடு வழிச்செல்வோரும் நன்கு பிழைக்க வழியுள்ளது, பிழையஞ்சுவார் வாடவும் நேர்தலுண்டு.
திருட்டை ஒழிக்க முயன்ற வரலாற்றின் முதற் பேரரசன், ஹம்முராபி என்னும் மத்தியக் கிழக்கினன் என்பது உங்களுக்குத் தெரியும். அந்தக் காலத்தில் சட்ட நூல்கள் என்று தனியாக யாதும் இல்லை. ஹம்முராபி, பெரும்கற்பலகைகளில் எழுதி, யாவரும் காண பலர் நடமாடும் இடங்களில் வைத்துத் திருட்டினைக் கண்டித்தான். பழங்காலத்தில் சட்டம் என்று சொல்லத்தக்கவை, அறநூல்களின் இதழ்களில் பிணைந்திருக்கும்.. மனுவின் சாத்திரம், சட்டம் எனத்தகும் முதனூல் என்னலாம். குற்றவியற் சட்டமும், மன்பதைச் சட்டமும் ( வாழ்வியல் விதிகள் ) இன்னபிறவும் கலந்துறையும் நூல்கள் இது போல்வன.
எப்படி எப்படி எல்லாம் திருடலாம் என்று கூறும் நூல் யாரும் தனியாக எழுதியதாகத் தெரியவில்லை. தடுக்கும் முறைகள் பற்றிய நூல்களிலிருந்து அவற்றை அறிந்துகொள்ளலாம். இல்லாவிட்டால் திருடனிடமிருந்து நேராகத் தெரிந்து இன்புறலாம். திருட்டு நிகழ்வுகளை அவை அறியவைக்கும். இந்தச் செய்தியைப் படித்து சிறிது அறிந்துகொள்ளுங்கள்.
இங்குச் சொடுக்கவும்:-
Woman claims she found cockroach in curry rice at Yishun eatery (msn.com)
விடுமுறைக்குப் போகிறீர்கள்? வீட்டிலிருக்க முடியாமல். உங்களுக்குப் பாடம் இதோ!
நீங்கள் கடிகாரம் அணிந்த உடன், உங்களுக்கு ஒரு பாட்டு வேணுமா?
இன்றொரு நாள் போதுமா? ---ரோலக்ஸ்சுக்கு
இன்றொரு நாள் போதுமா- கையில் கடி காரத்துக்கு
இன்றொரு நாள் போதுமா---- நாளைத் திருட்டுக்கு
எனக்கிது தோதம்மா!
என்று திருடன் பாடிக்கொண்டே வருவான்.
( இந்தச் செய்தியை வாசிக்க இந்தச் செய்திச்செருகலில் சொடுக்குங்கள் )
அறிக.
மெய்ப்பு பின்