கலன் என்ற சொல்லுக்கு நம் முன் தோன்றும் உள்ளுறைவுகள் பலவாகும்.
கலன் என்பது அணிகலன்களையும் குறிக்கும். இஃது "கலன் கழி மடந்தை" என்ற தொடரில் கண்டுகொள்ள இயல்கின்றது. இதன்பொருள் "விதவை" என்பதாகும். கையறு நிலைக்கு வருந்தி நிற்கும் பெண், கைம்பெண். இதனைக் கையறவு எனலும் ஆகும்.
கடிஞை என்பதும் கலம்தான். இது கடு என்பதனடியாகத் தோன்றியது காணத் தெரிகின்றது. கடு> கடி. கடினமான ஓட்டாலானது.
கலம் - கலன் என்பவை வெவ்வேறு அடிச்சொற்கள் பொருந்தி அமைந்து உருவாகி ஓர்முடிபு கொண்ட சொல்லாகும் வாய்ப்பினையும் ஆய்வு செய்தல் வேண்டும். கடிஞை என்பது கடு என்பதடித் தோன்றியதால், கலன் என்பதற்கும் அஃது அடியாய் இருக்குமா என்று நோக்குக.
கடத்தல் என்ற சொல்லுக்கும் கடு > கடு+ அல் என, கடு எனல் அடியாதல் முன் உரைக்கப்பட்டது. கடல் கடத்தல் ஆதிநாளில் கடத்தற்கரியது, அதற்கு அல்லாதது என்று மக்கள் எண்ணினர். இந்த அச்சத்திலிருந்து நாளடைவில் பல் இனங்களும் விடுபட்டன. முயற்சியும் பயிற்சியும் தேவைப்பட்டன.
அன் என்ற சொல், அணுகி நிற்றலைக் குறிக்கும். அன்-பு என்ற சொல்லின் பொருளில் இவ்வணுக்கம் தெளிவாகிறது. அன் என்பது அண் என்பதற்கு இணை நிற்பதான சொல்.
கடு> கட.
கட > கட + அல் > கடல்.
கடு> கடி > கடிஞை. பிச்சைக்கலம். இரப்போர்கலம்.
கடு> கட + இல் + அன் > கடிலன் > இடைக்குறைந்து, கலன்.
கடு > கட > கடப்பு+ அல் > கடப்பல் > கப்பல்
கடப்பதற்கு ஓர் இல்லம்போலும் அமைந்தது, கலம் என்பது தெரிகிறது.
நீருடன் ஒட்டி மிதக்கும் இல்லம் என்பதை அன் என்ற ஈறு தெளிவாக்கும். விகுதியாகவும் இரட்டித்த பயன் தரும் இது.
அறிக மகிழ்க.
மெய்ப்பு பின்னர்.