கவிதை மறுபதிவு.
உரைநடைக் கவிதை
எல்லா அன்பு நேயர்க' ளுக்கும்
யாம் சொல்வோம் இன்பத் தீபஒளி வாழ்த்துகள்.
உலகப் போர்வரும் என்றுநாம் அஞ்சினுமே
நிலையில் நின்றிட்ட அமைதிக்கு மகிழ்வோமே.
தொற்றுகள் மிக்குவந்து தோழர்பலர் சென்றிடினும்
பற்றுடனே பல்லோர் நல்வாழ்வு தாம்கண்டார்.
இசையொடு கூத்தியலும் இன்னுமுள பல்கலைகள்
பசைபட்டு மக்களிடைப் பயின்றன ஓர்மகிழ்ச்சி.
உடல்நலத் துறையிலும் ஊறிவளர் பல்துயர்கள்
கடலென விரியினுமே காணாமல் தொலைந்தனவாம்.
இன்னபல இன்னிகழ்வும் இனிதுநம்முன் இட்டுவைத்து
கண்பலன் காட்டிய தீபஒளிக் கே-மகிழ்ந்தோம்.
பலகாரம் பலரோடும் நல்லுணவு விளைவுகளால்
நலம்தந்த தீபஒளி வரவேற்றோம் வரவேற்றோம்
இறைவற்கு நன்றிசொலும் இன்பத் தீபாவளியை
கரைகடந்த மகிழ்வுடனே கால்மாற்றி ஆடிமகிழ்.
பெரியவர் பிள்ளையரும் பெருமகிழ்வு மேம்படவே
அரிய இந்த நன்னாளில் ஆடியாடி நீமகிழ்வாய்.
வளம்தரும் தீப ஒளி வாடாத நன்மலராம்
களம்வென்ற களிப்பினிலே களைப்பற்றோய் ஆடிமகிழ்.
நேயர் அனைவருக்கும் தீபஒளி வாழ்த்துகளே
ஆயும்நற் றமிழால் ஆடியாடிப் பேருவகை.
வாழ்க வளமுடன். வாழ்க நலமுடன்.
இதைக் கவிதை வடிவில் (அப்போது) வெளியிட இயலவில்லை. ஆகவே இங்குச் சென்று காணவும். https://bishyamala.wordpress.com/2022/10/24/