சுனிதா என்னும் பெயர் எவ்வாறு புனைவுற்றது என்பதைத் தமிழ் மூலம் அறிந்துகொள்வோம்.
சுனை என்ற சொல், நீரினூற்றைக் குறிக்கும். மலையூற்று என்றும் கூறலாம். தரையிலிருந்து நீர்வரவுள்ள இடமே சுனை. புல்தரை, மரங்கள், நிழல் இவற்றுடன் நீருமிருந்தால் மனிதன் ஓய்வு பெற்றுத் தன்னை உயிர்ப்பித்துக் கொள்ள அஃதே தகுந்த இடமாகும்.
தண்ணீருக்குத் தவிப்பவன், இத்தகைய இடத்தைத் தேடி அலைவான்.. தக்க தருணத்தில் தண்ணீர் தந்து காப்பாற்றுபவள் தாய்.
இதில் சுனை, தாய் என்ற இரு சொற்கள் உள்ளன.
தாய் என்பது தா என்று இங்கு வருகிறது.
குலம் செழிக்க ஒரு குழந்தை தருவாள் தாய். தா - தருதல். தா+ ஆய் > தாய். (தாவாய் அன்று).
தம் ஆய் > தாய் என்போரும் உளர்.
மேலும் நீர் தந்து உயிர்காக்கும் தாய் என்று பொருள்தருவது சுனிதா என்பது.
சுனைதல் என்பது குழைதல் என்றும் பொருள்தருவதால், அன்புடைமை என்பதும் ஆகும்.
கல்லில்வரும் நீரும் சுனைவு என்ப
சுனைதா > சுனிதா திரிபு.
சுன் என்பது அடி. சுல் > சுன் > சுனை. சுல் என்பது ஆதியடிச்சொல். மூலம் என்ப. செய்சுனை என்பது குளம் என்றும் பொருள்தரும். சுன்+ஐ என்பதில் ஐ வீழ்ந்து, சுன்> சுனி> சுனிதா ஆகும்.
சுனி என்பதில் இகரம் இடைநிலை. இ - இங்கு எனினுமாம்.
நீர் ததும்புவன சுனை(கள்) என்னும் பரிபாடல் வரி.
வாக்கியமாக்குவதானால், சுனையாகிய இது என் தாய் என்றபடி.
சுனை இது என் தாய்.
வேறுமொழிகளில் அவர்கள் அறிந்த அடிச்சொல்கொண்டு பொருள்கூறுவர்.
சுனை என்பதில் ஐ விகுதி. அடிச்சொல் சுல் என்பது சுற்றுதல் குறிக்கும். நீர் வளைந்தோடி வருவது. இது போதும் இன்று. சுல்> சுன்> சுனை; கல் > கன் > கனம். ஒரு சொல் ஐ விகுதி பெற்றது. இன்னொன்று அம் பெற்றது. மொழிவரலாற்றில் தொடக்ககாலத்தில் விகுதி இல்லை அல்லது குறைவு.
அறிக மகிழ்க.
மெய்ப்பு பின்.