(எழுசீர் விருத்தம்).
மகிழுந்தில் போனாலும் பேருந்தில் போனாலும்
மகுடமுகி தாக்காத கவசமிட்டு,
நெகிழ்ந்துருகும் உறவுடனே உடன்செல்வ தென்றாலும்
நெட்டணிமை இல்லாத தொலைவு கொண்டும்
வகுதிண்மைத் திட்டத்தில் நாட்டோடும் ஒன்றாகி
வருநோய்கள் யாவினையும் வென்றுவாழ்வீர்
தொகுதியும தாவதென்(ன) அடிப்படைகள் மிகச்சரியேல்
தூயநல இன்வாழ்வும் உமதாகுமே!
மகுடமுகி - கொரனா வைரஸ்
மகிழுந்து - உந்துவண்டி
பேருந்து ---- பஸ் என்னும் வாகனம்
நெட்டணிமை, கிட்ட இருப்பது, தூர இருப்பது. சரியான
இடைத்தொலைவு
தொகுதியுமதாவதென்ன - நீங்கள் எங்கு வாழ்ந்தாலும் என்ன,
அடிப்படைகள் மிகச்சரியேல் - நீங்கள் கடைப்பிடிப்பது சரி என்றால்
எல்லாம் சரியானால் இனிதாக வாழ்வீர்.
படத்தில் திரு மாசிலாமணி ( எம் ஆய்வினர்) பேருந்தில் பயணம் செய்கிறார்.
அறிக மகிழ
மெய்ப்பு: பின்.