கெட்டுவிட்ட உலகத்தை நன்றே ஆக்கக்
கிட்டுமொரு வழிதேடி அலைகின் றோமே!
பட்டுவிட்ட மரம்போல மக்கள் வீழ்ந்து
மடிகின்றார் நோய்த்தொற்றால், பரிந்து நல்லோர்
ஒட்டுறவும் பல்குடியும் காத்துக் கொள்ள
உலகின்முனம் பட்டறியாப் பாடே பட்டார்!
மட்டிலவாய்த் தடுப்புபல மேவித் துன்பம்
மட்டுறுத்தும் வழிகளையே தொட்டாய்ந் தாரே.
கெட்டுவிட்ட - சீரழிந்துவிட்ட
கிட்டும் - கிடைக்கும்
பட்டுவிட்ட - பட்டுப்போன, காய்ந்துபோன
பரிந்து - அதுதாபம் கொண்டு
ஒட்டுறவு - சார்ந்திருப்போரை மேலும் உறவினரை
பல்குடி - மக்களை
முனம் - முன் காலத்தில்
பாடே - துன்பமே
மட்டிலவாய் - மிகவான
மேவி - மேற்கொண்டு
மட்டுறுத்தும் - குறைத்துக் கட்டுக்குள் கொண்டுவரும்.
தொட்டாய்ந்தாரே - ஆரம்பித்து ஆராய்ச்சி மேற்கொண்டாரே
[Gov.sg அனுப்பிய தகவல் – ஜனவரி 6]
ஓமிக்ரான் கிருமிவகை: ஆக அண்மைய சுகாதார நடைமுறைகள்
😷 அறிகுறிகள், உடல்நிலை ஆகியவற்றின் கடுமைத்தன்மை அடிப்படையில் நோயாளிகள் பரிசீலிக்கப்படுவார்கள். ஜனவரி 6 முதல்:
1️⃣ உடல்நலமில்லை: மருத்துவரைப் பார்க்கவும்
🔹 கடுமையாக நோய்வாய்ப்பட்டோருக்கும் அபாய நிலையில் இருப்போருக்கும் தடுப்பூசி நிலை அடிப்படையில் 10/14 நாள் தனிமை உத்தரவு
2️⃣ நலமாக இருப்போர், மிதமான அறிகுறிகள் உள்ளோர்: சுயமாகத் தனிமைப்படுத்திக்கொண்டு, 72 மணிநேரத்துக்குப் பின், கிருமித்தொற்று இல்லையென உறுதியானால், வெளியே செல்லலாம்
3️⃣ நெருங்கிய தொடர்பு: 7-நாள் சுகாதார அபாய எச்சரிக்கை
🔗 covid.gov.sg
✅ முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்ட நிலையைத் தக்கவைத்துக்கொள்ள, கூடுதல் (Booster) தடுப்பூசி தேவை
🔷 பிப்ரவரி 14 முதல், 18 வயதிற்கும் மேற்பட்டோர், முதல் இரண்டு தடுப்பூசி போட்டுக்கொண்டு 9 மாதம் வரை, முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டோராகக் கருதப்படுவர்
🔷 இரண்டாவது தடுப்பூசி போட்ட பின்னர், 5 முதல் 9 மாதத்திற்குள் கூடுதல் தடுப்பூசியைப் (Booster) போட்டுக்கொள்ளவேண்டும்
சில தட்டச்சுப் பிழைகள் திருத்தம்: 08012022 1212
அறிக மகிழ்க.
மீள்பார்வை பின்.