ஞாயிறு, 19 டிசம்பர், 2021

கார்த்திகைப் பூசை விழுமிய நாளிலே.


 கார்த்திகை மாதம்

கந்தர் அலங்காரம்

கண்கவர் கவினாம்

இல்லங்கள் தோறும்.

காற்றும் கந்தனின்

பேர்தனை இசைக்கும்!

பற்றர்தம் நாவினில்

கந்தனை இணைக்கும்.


விழுமிய - மிகவும் சிறந்த.



இல்லங்களில் பத்தியோகம்

 யாமறிந்த  வீடுகளில் பத்தி யோகம்

யாதொருநா ளென்றாலும் குன்ற லின்றி

தேமதுர மணியோசை பாடல் மற்றும்

தேவனுக்குப் படையலென யாவும் கொண்டு,

ஓமெனுமந் திரவோசை ஒன்றி மேவ

உவந்தனைவ ருஞ்சேர்ந்து பங்கு கொள்ள

ஏமுறுக இவ்வுலகம் என்று கூவ,

இயல்கிறது காண்கின்றோம் ஞாலம் வாழ்க.


கருணா  அகத்துக் கனிபத்திக்   காட்சி

தருநேர்த்  தகுபடங்கள்    காண்.


பொருள்:


பத்தியோகம் -  பக்தியோகம்

யாதொருநாள் -  எந்த உரிய நாளாக இருந்தாலும்

தேவனுக்கு -  இறைவனுக்கு

ஒன்றி மேவ - எல்லா நிகழ்விலும் கலந்து நடைபெற

உவந்து - மகிழ்ந்து

ஏமுறுக -  பாதுகாவல் மிகவேண்டும்

ஞாலம் வாழ்க -  உலகம் வாழ்க

அகந்தனில் - வீட்டில்

கனிபத்திக்காட்சி =  பக்தியானது கனிந்து ஒழுகும் தோற்றநிகழ்வு

தரு -  வருகின்ற

நேர் - உண்மையான

தகு படங்கள் - தகுதி பெறும் படங்கள்.

காண் -  பாருங்கள்




படம் அனுப்பிய பற்றாளர்:  கருணாஜீ


சனி, 18 டிசம்பர், 2021

அம்மாவுக்குக் கொடுத்த திண்ணப்பம்: "கேக்"


 அம்மாவுக்குப் பிறந்தநாள் என்றால்

அன்புப் பரிசொன்று நலமாகுமே!  ---  ஓர்சீமை

அப்பமென்றால் பாசம் பலமாகுமே!


படத்தில் இவ்வப்பம் பாருங்களேன் ---  காணப்

பரிய  தப்பம்நா வூறும் இதே! ---  உண்ண

வாரீரோ இனிமை சேருங்களே.