இந்தச் செய்தியை இங்குச் சொடுக்கி வாசிக்கவும்.
Singapore — Who’s to blame for Singapore’s “stalled” recovery from Covid-19?
தொடர்ந்து மேலுள்ள இணைப்பைச் சொடுக்கி வாசிக்கவும்.
By Sivamaalaa : Poems , Commentaries to other literary works. Etymology of selected words சிவமாலாவின் கவிதைகள் கட்டுரைகள் பழஞ்செய்யுட்களுக்கான உரை விளக்கம் சொல்லாய்வுகள் இன்னும் பல WELCOME உங்கள் வருகை நல்வரவாகுக.
இந்தச் செய்தியை இங்குச் சொடுக்கி வாசிக்கவும்.
Singapore — Who’s to blame for Singapore’s “stalled” recovery from Covid-19?
தொடர்ந்து மேலுள்ள இணைப்பைச் சொடுக்கி வாசிக்கவும்.
[Gov.sg அனுப்பிய தகவல் - அக்டோபர் 22]
அக்டோபர் 21, நண்பகல் 12 மணி நிலவரப்படி, கொவிட்-19 நோய்தொற்றால் 1,613 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில், கடுமையாக நோய்வாய்ப்பட்ட 346 பேருக்குப் பிராணவாயு தேவைப்படுகிறது; 61 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.
கடந்த 28 நாட்களில், கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோரில்,
- மிதமான அறிகுறிகள் உடையோர் அல்லது அறிகுறிகள் அறவே இல்லாதோர்: 98.6%
- பிராணவாயு தேவைப்படுவோர்: 1.0%
- தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டோர்: 0.1%
- உயிரிழந்தோர்: 0.2%
அக்டோபர் 20 நிலவரப்படி, நம் மக்கள்தொகையில்,
- முழுமையாக / இரண்டு தடுப்பூசி போட்டுக்கொண்டோர்: 84%
- குறைந்தது ஒரு தடுப்பூசி போட்டுக்கொண்டோர்: 85%
அக்டோபர் 21 நிலவரப்படி, சிங்கப்பூரில் புதிதாக 3,439 பேருக்குக் கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
go.gov.sg/moh211021
ஓர் அயற் பயன்பாட்டுக்காக ஒரு சொல்லைப் படைத்தளிக்கும்படி ஒரு தமிழ்ப் புலவனைக் கேட்பதாக வைத்துக்கொள்வோம். இது ஒரு வகையில் தமிழ் இலக்கண விதிகளைக் கவனிக்கவேண்டாத ஒரு கட்டற்ற கடமை என்றே சொல்லவேண்டும். இதற்குக் காரணம், பயன்பாடு வேறு மொழியில் என்னும்போது குடாப்பிலிருந்து வெளிவந்த கோழிபோல எப்படி வேண்டுமானாலும் செயல்படும் வசதி ஏற்பட்டுவிடும். தமிழென்பதோ பல இலக்கண விதிகள் உள்ள மொழி. இதில் பலவற்றைக் கவனத்தில் கொள்ளவேண்டிய கட்டுப்பாடு உள்ளது. மற்ற மொழிக்கு எனில், அம்மொழிக்கு இலக்கணங்கள் இருந்தால் அவற்றை ஒரு வேளை கவனத்தில் கொள்ளவேண்டி வரலாம்.
போஷாக்கு என்ற சொல்லின் வினை, போஷித்தல் என்பதாகும். ஆகவே போஷி என்ற சொல் எவ்வாறு வந்ததென்பதை முதலில் அறியவேண்டும். போஷித்தல் என்பது ஊட்டமளித்தல் என்ற பொருளது ஆகும்.
ஊட்டச்சத்துக்கள் என்று கருதத்தக்கவை எல்லாம் உடலுக்கு வெளியில்தாம் உள்ளன. மனிதன் உடலுக்கு ஊட்டமளிக்க, இவ் வெளியில் கிட்டும் உணவுகளைத்தாம் உட்கொள்ள வேண்டும். அதாவது உடலுக்குள் போகும்படிச் செய்தல் வேண்டும்.
போ > போ இ > போ இத்தல் .
இது புது > புதுப்பி > புதிப்பித்தல் என்பது போன்றது. ~பி என்ற பிறவினை ஆக்க விகுதியானது, உண்மையில் புது +ப் + இ என்பதே ஆகும்; அணிவித்தல் என்பதில் வி என்பது உண்மையில் வ் + இ என்பதே. ப் வ் என்ற இடைநிலைகள் உடம்படுத்துவன. வசதியின்பொருட்டு ~வி என்றும் ~பி என்றும் விளக்கப்படும்.
அசைஇ , காணி(~த்தல்) என்று வருவனவற்றில் இ என்பதும் வேறன்று.
இது பின்பு போயி > போஷி > போஷித்தல் ஆனது. ( உடலினுள் போமாறு செய்தல் ). அதாவது உண்ணுதல் மூலம் ஊட்டச்சத்தை அளித்தல்.
போஷக்கு என்ற தொழிற்பெயரில், போஷி + கு > போஷாக்கு என்று சொல் அமைந்தது. கு என்பதும் ஒரு சொல்லாக்க விகுதியே. எ-டு: குறு > குறுக்கு. இதற்கு ஆக்கு என்ற தமிழ்ச்சொல் பின்புல உதவியாயிருந்தது.
இவ்வாறு போஷாக்கு என்ற சொல் அமைந்தது காணலாம்.
இனி, புசித்தல் : புசி > புசி ஆக்கு > பூசாக்கு > போசாக்கு என்று வந்தது எனினும் அவ்வாறும் அமைதல் கூடுமாதலால், இஃது ஓர் இருபிறப்பி என்று முடிக்க.
அறிக மகிழ்க.
மெய்ப்பு பின்னர்.