வெள்ளி, 1 அக்டோபர், 2021

ஆமை மனிதர் கலந்துறவு. The tortoise pet goes for a walk.


 Saw this in the park earlier . Man bringing out his pet for a walk.

                                                               --------Mrs Roshini Prakash.

 


இந்தப் படத்தைத் தந்து  உதவியவர்:  திருமதி ரோஷினி பிரகாஷ்.

இதை வளர்ப்பவர் நடைப்பயிற்சி செய்யப் புறப்படும்போது அவர் வளர்க்கும் இந்த ஆமையும் கூடவே செல்கிறது.  என்ன ஒற்றுமை இந்த ஈருயிருக்கும்!

விலங்கோடு மனிதர்

கலந்துறவு  வளர்க.


When the owner sets out for a walk, the turtle he raises also walks along with him.  Excellent unity between man and animal.   May such relationship between man and animal flourish.


கூட்டமும் கோவிட்டும்

 









கோவிட் இல் லாவிடத்தில் கூட்டம் இல்லை,

இல்லைகூட்டம் எனிலங்கு  கோவிட் இல்லை.

எல்லாத் தெய் வங்களுமே செய்த நன்மை

நன்மைஒன்றும்   செய்யாத தெய்வம் இல்லை

ஞாலமிதில் அறியுண்மை  தொல்லை இல்லை

இல்லையிது தவிரஏதும்  உண்மை எல்லை.


அரும்பொருள்:

கோவிட்  இல்லாவிடத்தில்   ---- கோவிட் என்னும் கிருமி இல்லாத தலத்திலே, கூட்டம் இல்லை ---  மக்கள்திரள் எனற்பாலது காண்வியலாது;  இல்லை கூட்டம் எனில் -  --  மக்கள்திரள் காணவியலாத  நிலை எனில்,    கோவிட் இல்லை -  கோவிட் என்னும் நோய்நுண்மி அறிவியல் ஆய்வின் மூலம் கண்டுபிடிக்க இயலாது;    எல்லாத் தெய்வங்களுமே செய்த நன்மை   ---  இதுவே  எல்லா மதத்தின் பலபெயர்கள் உள்ள தெய்வங்களும் நமக்குச் செய்த நன்மை ஆகும்; நன்மை ஒன்றும் செய்யாத தெய்வம் இல்லை --   எந்த நன்மை செய்யாத ஒன்றை நாமும் தெய்வம் என்று குறிப்பிடுவதில்லை! ,     ஞாலமிதில் -  இந்த உலகத்தில்,  அறி  உண்மை -  இந்த உண்மையை அறிந்துகொள்வாயாக;   தொல்லை இல்லை -   அறிந்துகொண்டுவிடில் அதனால் உனக்கு தொந்தரவுகள் இரா;  உண்மை  எல்லை -  உளமையின் இறுதிக்கோடு,   இல்லை இதுதவிர ஏதும்  --  இது தவிர ஏதும் காணமுடியாது என்றவாறு.





மார்த்தாண்ட(ன்) பூபதி என்ற சொல்.

 இதுபோழ்து மார்த்தாண்டன் என்பதைப் பார்த்து,   பின்னர்  பூபதி என்பதையும் மற்றோர் இடுகையிற் காண்போம்.

மருவுதல் வினைச்சொல்.

மரு என்பது பகுதி.  வு என்பது வினையாக்க விகுதி.   ~தல் என்பது தொழிற் பெயர்  விகுதி என்பது நீங்கள் அறிந்ததே.

மரு >  மார்.     

இதுபோல் திரிந்த வேறு சொற்கள்:

கரு > கார் >  ..     (கார்காலம்,  கார்மழை,  கார்த்திகை.)

ஓரு >  ஓர்        ..     (  எண்ணுப்பெயரும் இவ்வாறே  திரியும்.

இரு >  ஈர்.        ..    (  இரண்டு என்ற எண்ணுப்பெயர்  )

பெரு >  பேர்    ..   (  உயிர்வரத்  திரிதல்,   பெரு ஆசான் -   பேராசான்)

துரு >  தூர்  ...       ( எதையும் துருவிச் செல்ல, இறுதியில் அல்லது அடியில்              `                                    இருப்பது தூர்

பரு  >  பார்            (பருவதத்தின் அரசி பார்வதி )


மார்த்து   -   மருவுதல் உடையது  என்று பொருள்.

பிற அரசர்கள் வந்து ஒரு பெரிய அரசனைத் தழுவிச் செல்வர்.  அது அடிபணிதலோ,  கப்பம் கட்டுதலோ என, ஏற்புடையவழி நடைபெறும்.

ஆகவே,  மரு > மார் > மார்த்து..  ( மருவுதல் , மருவித்தல் என்று தன்வினை பிறவினைகளை அறிந்துகொண்டால்,   மருவித்து என்பதன் திரிபே "மார்த்து" என்பதறிக.  மற்றவர்கள் தன்னைத் தழுவி அரசு நடாத்துமாறு  இயங்கிப் புகழடைந்தவன் )

ஆண்டன்,  ஆண்டவன், ஆண்டான், ஆண்டி என்பன ஆள்தல் அடிபடையில் எழுந்த சொற்கள்.  ஏற்புடையவாறு  அரசனையும் கடவுளையும் குறிப்பன

மார்த்து  ஆண்டன் >  மார்த்தாண்டன்.

பிற பின்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்.