இந்தத் துயரச் செய்தியை அறிந்து வருந்துகிறோம். இறந்துவிட்ட தொழிலாளர்களுக்கு எங்கள் இரங்கல். காயமுற்ற பிறருக்கு, விரைவில் குணமடையப் பிரார்த்தனை.
செய்தி:
By Sivamaalaa : Poems , Commentaries to other literary works. Etymology of selected words சிவமாலாவின் கவிதைகள் கட்டுரைகள் பழஞ்செய்யுட்களுக்கான உரை விளக்கம் சொல்லாய்வுகள் இன்னும் பல WELCOME உங்கள் வருகை நல்வரவாகுக.
இந்தத் துயரச் செய்தியை அறிந்து வருந்துகிறோம். இறந்துவிட்ட தொழிலாளர்களுக்கு எங்கள் இரங்கல். காயமுற்ற பிறருக்கு, விரைவில் குணமடையப் பிரார்த்தனை.
செய்தி:
எண்பது விழுக்காட்டினர் தடுப்பூசி அதனால்
நோய்பற்றிய புள்ளிவிவரங்கள் மாறின.
நூற்றிலெண் பதின்மர் நுடங்கார் நோயினால்
மாற்றிய மைத்ததே மகுட முகிநோய்
ஏற்றிய நோயுற் றுழந்தவர் தொகையினை;
ஆற்றினர் நற்றொண் டறிந்த மக்களே
நுடங்கார் - நோய்வாய்ப் படமாட்டார்.
மகுடமுகி - கொரானா நோய்
ஏற்றிய தொகை - கூடின புள்ளிகள்
உழந்தவர் - துன்புற்றோர்
தடுப்பூசியும் நோய்க்கிருமியை ஏமாற்றும் தந்திரமே
தடுப்பும ருந்தூ சிதனை ஏற்றவர்
தடுப்பினை மேற்கொள் தந்திறம் போற்றினர்
கெடுப்புதம் வாழ்வில் கிளைத்தெழா நோக்கமே
உடுப்ப துளத்தினில் ஓங்கிய பெற்றியர்.
தந்திறம் - தமது திறமை
ஏற்றவர் - தடுப்பூசியை ஏற்றுக்கொண்டவர்கள்.
கெடுப்பு - கெடுதல்.
உடுப்பது நோக்கம் உள்ளத்தினில் - --
உள்ளத்து நோக்கம் உடையவர்கள். உடுத்தல் - கொள்ளுதல்.
தடுப்பாற்றல் பெருகியது.
இறந்தவர் போக இருந்தவர் பலவரும்
சிறந்தனர் நோய்த்தடை உடலில் திரண்டிட;
பெருந்திறல் நோயடைப் பிதுவெனச் சொல்வதால்
அருந்திறல் இனிமேல் வாழ்வினில் இயல்பே.
இறந்தவர் - மகுடமுகி (கொரனா)வில் இறந்தவர்.
நோய்த்தடை உடலில் திரண்டிட - மந்தைத் தடுப்பாற்றல் உடலில் உண்டாக.
பெருந்திறல் நோயடைப்பு - மிக்கத் திறனுடைய நோய்த்தடுப்பு.
வாழ்வினில் இயல்பே - இனி, வாழ்வு இயல்பாகிவிடும்.
herd immunity - மந்தைத் நோய்த்தடுப்பாற்றல்
ந,ம் நம்பிக்கை
குறள்வெண்பா.
நோயிலா வாழ்வினி நோக்கயாம் மேயவோர்
ஆய்வுரை வேண்டற்பாற் றன்று.
பொருள்: இனி ஆய்வு செய்யவேண்டியதில்லை! இயல்பு
வாழ்க்கை திரும்பிவிடும்.
உலகின் மாறுபட்ட நிலைகளை ஏனென்று அறிய இயல்வில்லை. அதைச் சிந்துத்து இந்த வரிகள் தாமே வந்தவை. அதை ஒருபக்கம் எழுதிவைத்தோம்.
நீரிலை என்று நிரப்போர் ஒருபுறம்
மாரியின் பொழிவில் மாள்பவர் ஒருபுறம்
வாரி சூழுல கில்காண் வருத்தும்
மாறு பாடுகள் மலைவுறப் பலவே.
நிரப்போர் - நீர் இருக்குமிடத்துக்குப் பரவுவோர். கூடுவோர். இவர்களைக் குறிக்கும். பரவுதற் கருத்து. ( நீரை நிரந்துகொள்வோர்).
பொழிவு: மழை.
இதைத் தொடர்ந்து சிந்தித்துப் பின்னூட்டம் இடுங்கள். உரையாடுவோம்.