இந்தக் கோவிட் காலத்தில் வெளியிற் செல்லமுடியவில்லை. யார் நோய்வாய்ப் பட்டிருந்தாலும் தெரியவந்தால் சென்று ஆறுதல் கூறுவது ஒரு நல்வினை ஆகும். கோவிட் காரணமாக இந்நல்வினையை ஆற்றமுடியவில்லை. அதைக் கூறி வருந்துகிறது இப்பாடல்.
எங்கும் போக முடியாத இவ்வேளை
எந்நோயும் வாரா முன்னம்,
நன்கு தூய்மை நாட்டினது நோய்மனை
அங்கேனும் போவோம் என்றால்,
கண்கள் காலொடும் அணியமே ஆனாலும்
எண்ணுங்கால் தடையுண் டேகாண்,
பண்ணென் றியாரும் பகிராத தொன்றுண்டு
பாவிமுடி முகியாம் தொற்றே. 1
நோய்மனை - மருத்துவமனை
அணியமே - தயார் ( ஆங்கிலம் ரெடி)\
எண்ணுங்கால் - கருதும்போது
முடிமுகி - கோவிட் 19
தொற்று - தொற்றுநோய்.
பண்ணென்று - இசை என்று
பகிராத - தம்முள் ஏற்றுக்கொள்ளாத
முடிமுகி - மகுடம்போன்ற முகத்தை உடைய கோவிட் நோய் நுண்மி.
இது கோவிட்டுக்கு முன்னுள்ள நிலைமை:
வீட்டில்நாம் தூங்குதல் விடுத்தாங்கு நோயுற்றார்
தமைச்சென்று காணல் நன்றே
கூட்டில் இருப்பெனக் கூவித்தான் வருந்திடுவர்
குறையில்லை காணின் அன்னார்
வாட்டும் நோயினில் வாழ்த்தொலி போய்த்தந்தால்
வான்நலமே அதுவே என்றே
ஊட்டுக உணவினை நாட்டிடுக நற்செயலே
ஈட்டிடுக நல்ல பயனே. 2
கூட்டில் இருப்பு = ஒரு அடைக்கப்பட்ட இடத்தில் இருப்பது
வருந்திடுவர் - அடைபட்டுக் கிடக்கிறோம் என்று துயர்ப்படுவர்.
வான்நலமாம் - உயர்ந்த நன்மை
ஊட்டுக உணவினை = அவர்களுக்கு உணவு தருக என்பது.
மற்றவை எளிய சொற்கள். அவற்றின் பொருள் நீங்கள்
அறிந்தது.
வாசித்து மகிழ்க.
மெய்ப்பு பின்னர்
ஆசிரியர் குறிப்புகள்
இவ்வரிகள் நீக்கப்பட்டன.
{என்னென் றியாரும் எட்டவேஓ டுந்துன்ப
இயல்பினதா முண்டோ மற்றே.}
2 2 3 3
3 2 2
2 2 3) 3