By Sivamaalaa : Poems , Commentaries to other literary works. Etymology of selected words சிவமாலாவின் கவிதைகள் கட்டுரைகள் பழஞ்செய்யுட்களுக்கான உரை விளக்கம் சொல்லாய்வுகள் இன்னும் பல WELCOME உங்கள் வருகை நல்வரவாகுக.
வியாழன், 2 செப்டம்பர், 2021
புதன், 1 செப்டம்பர், 2021
முடிமணியாகச் சூடிக்கொள்ளுங்கள்
மற்றபல பேச்செழுத்து மாண்பின் கற்று
வந்ததனால் வந்ததிகழ் வரவு தன்னால்
பெற்றதமிழ் தன்னைமிகப் பேண எண்ணிப்
பெருக்கிடுமோர் பெய்முகிலாய்ப் பிறங்கும் இந்த
உற்றசிவ மாலைதரு வலைத்த ளத்தை
உங்கள்நறும் பித்தைமணி யாகச் சூடும்
பற்றுளமே பயனூறிப் பயில்க வாழ்வே.
பரந்துலகத் தமிழ்துலங்கும் பரிதி வாழ்வே.
அரும்பொருள்
பல பேச்செழுத்து - பல மொழிகள்.
மாண்பில் - நல்லபடியாக.
கற்று வந்ததனால் -- கற்றுப் பெற்ற அறிவால்
வந்த திகழ் வரவு - பெற்ற வருமானம்
தன்னால் - அதனால்.
பெற்ற தமிழ் தன்னை - இத் தாய்மொழியாகிய தமிழை
பேண எண்ணி - வளர்க்க எண்ணி,
பெருக்கிடுமோர் - வளர்த்திடும் ஒரு
( ஓர் என்பது ஒரு என்று இங்கு வரத்தேவையில்லை. இது கவி )
பெய் முகிலாய் - மழை பெய்யும் மேகம் ( போல)
பிறங்கும் - ஒளிவீசும்,
உற்ற சிவமாலை தரு - உள்ளுறவு பூண்ட சிவமாலா தருகின்ற
வலைத்தளத்தை ---
உங்கள் நறும் பித்தை மணி - உங்கள் தலையில் அணியும் ஒரு
முடி மணியாக, [ பித்தை - முடியணி தங்கப் பிடிப்பு.]
தங்கத்தினாலான பிடிப்பு: பிடிப்பு ( ஆங்கிலத்தில் கிளிப்)
சூடும் உளப்பற்று தனக்கு --- நீங்கள் அணிகின்ற உள்ளத்துப் பற்றுதலுக்கு
ஊறி - ஊற்று போல மிகுந்து,
உயர்க வாழ்வே.--- உங்கள் வாழ்வு வளம்பெறுக,
பற்றுளமே பயனூறிப் பயில்க வாழ்வே--- உலகெங்கும் தமிழ்
தழைக்குமானால் வாழ்க்கை மேம்பாடு அடையும்,
பரந்துலகத் தமிழ்துலங்கும் ------ விரிந்து உலகத்தமிழ் விளங்கும்
பரிதி வாழ்வே. --- சூரியன்போல் வாழ்வு ஒளிரும்,
(ஓங்கும் வாழ்வே. )
என்றவாறு.
சிவமாலா தளம் தமிழைப் போற்ற, அதனால் உங்கள் மனம் மகிழ,
அம்மகிழ்வினால் மற்ற துறைகளிலும் நீங்கள் நன்றாகச் செயல்பட,
எல்லாம் மேம்பாடு அடையும் என்பது கருத்து.
உள்ளம் மகிழ்ந்தால்தானே வாழ்வு சிறக்கும் என்பது.
செவ்வாய், 31 ஆகஸ்ட், 2021
வாய்மை - வாஸ்தவம்
இன்று வாய்மை என்பதனுடன் கொடியுறவு கொண்ட சொல்லான வாஸ்தவம் என்பதை உற்று நோக்குவோம். இதை நாம் சுருக்கமாகவே அடைந்துவிடலாம்.
முன் தமிழ் வடிவம்: வாய்மை.
யகரம் சகரமாகத் திரியும். சகரம்.> ஸகரம் > ஸகர மெய். இதை மனத்தில் இருத்திக்கொண்டு: மேற்செல்க.
மை என்ற சொல்லிறுதி தமிழுக்கே சிறப்பாக உரியது. அதை விலக்க, மிச்சம் இருப்பது வாய்.
வாய் > வாய்த்து: இதன் தமிழ்ப்பொருள்: வாயைத் ( தளமாக ) உடையது. ( அல்லது தோன்றிடமாக உடையது)
வாய்த்து + அ ( இடைநிலை ) + அம்.
> வாய்த்து + அ +வ் + அம் ( வ் என்பது உடம்படு மெய் ). து அ > த. இங்கு உகரம் கெட்டது.
> வாய்த்த + வ் + அம்
> வாய்த்தவம். > வாஸ்தவம். ( திரிபு) இங்கு ய் த் விலக்கு.
அறிக மகிழ்க.
மெய்ப்பு பின்னர்.