By Sivamaalaa : Poems , Commentaries to other literary works. Etymology of selected words சிவமாலாவின் கவிதைகள் கட்டுரைகள் பழஞ்செய்யுட்களுக்கான உரை விளக்கம் சொல்லாய்வுகள் இன்னும் பல WELCOME உங்கள் வருகை நல்வரவாகுக.
திங்கள், 7 ஜூன், 2021
எழுதுகோல் பெயர்கள்: தூவி , குன்றிக்கோல்.
எழுதுகோலுக்குத் தமிழ்ப் பெயர்கள் சில காட்டப்பெற்ற இடுகையை நீங்கள் இங்குப் படித்திருப்பீர்கள். அதை இன்னொரு முறை வாசித்துக்கொள்ளலாம்.
https://sivamaalaa.blogspot.com/2017/12/blog-post_30.html
எழுதுகோலுக்கு இன்னொரு பெயரும் உண்டு. அதுதான் "தூவி" என்பது. தூவி என்ற சொல் இறகு என்றும் பொருள்படும். சிலகாலம் சிலர் எழுதுகோலைத் தூவி என்றும் குறித்ததுண்டு.
சித்திரம் அல்லது ஓவியம் வரைவதற்குப் பயன்படுத்தும் கோலை ஓவியத் தூவி எனலாம் என்று நினைக்கின்றோம். இதைத் தூரிகை என்பது பெரும்பான்மை.
வரைதல் என்பது எழுதுவதைக் குறித்தாலும், ஓவியம் வரைதலையும் குறிக்கும். எனவே வரைகோல் என்பது இருவகை வேலைகளையும் செய்வதற்குரிய கோலின் பொதுப்பெயர் என்று தெரிகிறது.
"சாக்" என்பது இன்னும் கிடைக்கிறது. அதை மாக்கோல் என்று கூறலாம்.
குன்றி என்ற சொல் பல சொற்களில் பயன்பாடு கண்டுள்ளது. அவற்றை எல்லாம் இங்குத் திரட்டிக் கூறுவதற்கில்லை. இது நண்டுக் கண்ணையும் குறிப்பது. சிறிய பந்துபோல் வெளியில் வந்து காண உதவுகிறது. பின்னர் உள்ளே பதிந்துகொள்ளும். இச்சொல் (குன்றி) குஞ்சி என்றும் திரியும். கரிய ஒரு பருப்புவகை கருங்குன்றி ( துவரைக் குன்றி) எனவும் சுட்டப்படும். சங்க இலக்கியமான குறிஞ்சிப் பாட்டிலும் வந்துள்ளது ( 72). இவற்றைக் கருத்தில் கொண்டு "பால்பென்" என்பதைக் குன்றிக்கோல் என்றும் குறித்தல் பொருந்தும். குன்றிமணி (குண்டுமணி) என்பதும் கருதுக.
அறிக மகிழ்க
மெய்ப்பு பின்
கோவிட் நோய் - ஏனெடுத்தோம் இப்பிறவி.
வெண்பா
பொதுமுடக்கம் போனநாட் சொப்பனம் என்றால்
இதுபிறவி யாகஏற் பேனோ ----- மதுவறவும்
வண்டுபூ நாடிடுமோ வாழ்நாளிற் கூடாநாள்
என்றுபோம் கோவீ திடர்..
பொருள்:
போனநாட் சொப்பனம் - முன்பிறவியில் கண்ட கனவில்,
பொதுமுடக்கம் - ஊரடங்குபோல நாடு முடங்கிக் கிடக்கும் நிலை,
என்றால் --- (வந்து நாம் துன்புறுவோம்) என்றால்,
இது பிறவி ஆக - இது அடுத்த பிறவியாய் நான் பூமிக்கு வர,
ஏற்பேனா - கடவுளிடம் ஒப்புக்கொள்வேனோ, மாட்டேன்;
மதுவறவும் -- மது அறவும் --- தேன் இல்லாவிட்டால்,
வண்டு பூ நாடிடுமோ - வண்டு மலரை நாடுவதில்லை;
வாழ்நாளில் கூடா நாள் - வாழும் காலத்தில் இது கெட்ட காலம்;
கோவீ திடர் - கோவீது இடர் - கோவிட் என்னும் இந்த நோய்(த் தொற்றுப் பரவல்,)
என்று போம் - என்று தொலைந்து பழைய நிலை வரும்
என்றவாறு.
கட்டற்ற காலமே தேனுக்கு உவமை. தடைகள் இல்லாமையே தக்கது, ஆனால் இப்போது இயலாது.
வாசித்தறிய:
Pl click HTML address to reach the materials. Happy reading.
சொப்பனம்: சொல்லாய்வு: https://sivamaalaa.blogspot.com/2017/06/blog-post_27.html
மது : https://sivamaalaa.blogspot.com/2021/04/blog-post_21.html
வதனம் : https://sivamaalaa.blogspot.com/2018/07/blog-post_21.html
மது உண்போர் https://sivamaalaa.blogspot.com/2020/08/blog-post.html
தேன் மது: https://sivamaalaa.blogspot.com/2016/10/blog-post_27.html
மன்மதன் https://sivamaalaa.blogspot.com/2018/06/blog-post_12.html
Your comments : We value them.
மெய்ப்பு பின்.
-----------------------------------------------------------------------------------------
Pl feel free to point out errors such as typos etc. If not, we will correct
them when we next visit / spot them. Thank you.
-- Admin